7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லாரி மீது கார் மோதல் 5 பெண்கள் பரிதாப பலி: பரமத்திவேலூர் அருகே சோகம்

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அருகே சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி 5 பெண்கள் பலியாகினர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோர்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (45). இவர், சென்னை தாம்பரத்தில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா (43). கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றனர். இந்நிலையில் கடந்த 26ம் தேதி திருச்சி வீரப்பூரில் உள்ள பொன்னர்- சங்கர் கோயில் விழாவுக்கு ரவி, மனைவி கவிதா, மாமியார் கந்தாயி … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டப்படுகிறது. இதனையொட்டி  முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது!  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்ய உள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் சந்திப்பு: நீட் விலக்கு, வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவும், வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளரும், சென்னை திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக 2 நாள் … Read more

திரையுலகில் 26 ஆண்டுகளைக் கடந்த யுவன் ஷங்கர் ராஜா

இந்தியத் திரையுலகத்தின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. அவரது இரண்டாவது மகனான யுவன்ஷங்கர் ராஜா, தனது 16வது வயதில் 'அரவிந்தன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படம் வெளிவந்து நேற்றுடன் 26 ஆண்டுகள் ஆகியுள்ளது. தான் இசையமைப்பாளரானதற்கு ஏஆர் ரஹ்மானும் ஒரு காரணம் என யுவன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏஆர் ரஹ்மான் புதிய ஒலியமைப்பு, வித்தியாசமான இசை என தனது ஆரம்ப கால கட்டங்களில் புதிய அலையை ஏற்படுத்தினார். … Read more

ராஜிவ் கொலை வழக்கு.. முருகன் உள்பட நால்வர் நாடு திரும்புவதில் சிக்கல்.. முகாம்களில் முடக்கம்

ராஜிவ் கொலை வழக்கு.. முருகன் உள்பட நால்வர் நாடு திரும்புவதில் சிக்கல்.. முகாம்களில் முடக்கம் Source link

இப்படி கூட எங்கேயாவது நடக்குமா ? பெற்ற மகளை பலமுறை பலாத்காரம் செய்ய பெற்ற தாயே உடந்தை..!!

டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் பகுதியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 14 வயது சிறுமி கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஹோட்டலுக்கு தன்னை அழைத்துச் சென்றது தனது தாயார் என்று பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது தாய் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மீது கூட்டுப் பலாத்காரம், போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோட்டலில் தனக்குத் … Read more

நெஞ்சை உலுக்கும் சம்பவம்! தனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை மகளை காப்பாற்றி உயிரை விட்ட தாய்..!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள தெனியமார் கிராமத்தை சேர்ந்தவர் துவாஷியா (45). இவரது மகள் ரிங்கி (11). கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தாயும் மகளும் இணைந்து தனது பண்ணை வேலைக்காக அருகே உள்ள வயல் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு தங்களுக்கு தேவையான மண்ணை துவாஷியா தோண்டிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் கூட்டமாக சில காட்டுப்பன்றிகள் கடந்து சென்றுள்ளன. மாடுகள் தான் செல்வதாக நினைத்து தனது பணியை துவாஷியா தொடர்ந்து செய்துள்ளார். அந்த நேரத்தில், திடீரென … Read more

அரிசி களைந்த தண்ணீர், பாதாம் ஆயில்.. முகத்தை பளிச் என்று மினுங்கவைக்கும் கொரியன் பியூட்டி டிப்ஸ்!

கொரியன் அழகுக் குறிப்புகளில் அப்படியென்ன சிறப்பு? அதிகச் செலவின்றியும் வீட்டிலேயே செய்யும் வகையிலும் சில கொரியன் பியூட்டி டிப்ஸ் இதோ… பேஸிக் சி.டி.எம். கொரியன் பெண்களின் சருமம், பொதுவாக பளிங்கு மாதிரி இருக்கும். இதற்குக் காரணம், அவர்கள் நாளொன்றுக்கு இரண்டு தடவை சி.டி.எம் (CTM – Cleansing, Toning and Moisturizing). செய்கிறார்கள். அதாவது, பாலேட்டால் சருமத்தை சுத்தப்படுத்தி, பன்னீர் அல்லது அரிசி களைந்த தண்ணீரால் டோன் செய்கிறார்கள். பிறகு, மேலே ஒரு மாய்ஸ்ரைசர் க்ரீமை அப்ளை … Read more

கோவில் திருவிழா தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல்.. 3 கிராமங்களில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதை அடுத்து அங்கு 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்பில் ஜங்கமராஜபுரத்தில் அமைந்துள்ள ஆச்சிராம வல்லி அம்மன் கோவில் திருவிழாவினை இந்த ஆண்டு நடத்துவது இயலாது என்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதனை மீறி மற்றொரு பிரிவினர் மாசி மாத காப்புக்கட்டு தேர்திருவிழாவை தன்னிச்சையாக நடத்த ஏற்பாடு செய்து வருவதாக … Read more