அமைச்சரவை பரிந்துரைக்கும் முடிவை கவர்னர் ஏற்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்| The Governor has to accept the decision recommended by the Cabinet: Supreme Court

புதுடில்லி, ‘சட்டசபை கூட்டத்தை கூட்டும்படி மாநில அமைச்சரவை முடிவு எடுத்து பரிந்துரை செய்தால், அதையேற்று சட்ட சபையை கூட்ட, கவர்னர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ‘இந்த பிரச்னையில் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர். அதேநேரத்தில், கவர்னர் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டசபை கூட்டத் தொடரை கூட்ட மாநில அரசு முடிவு செய்தது. … Read more

லியோ படத்தில் விஜய் 50 வயது கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியானது!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உட்பட பலர் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் 50 வயது மதிக்கத்தக்க ஒரு கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே வெளியான செய்தி தற்போது உறுதியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் விஜய்- திரிஷா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடிக்கும் நிலையில், அவர்களின் 15 வயது மகளாக பிக்பாஸ் … Read more

"திராவிட நாயகன்" முதல்வர் ஸ்டாலின்.. சென்னையில் பறக்கும் வெள்ளை பலூன்..!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் முன்னெடுத்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனது பிறந்தநாளை ஆடம்பரம் என்று கொண்டாட வேண்டாம் என்றும், பேனர் வைப்பது, போஸ்டர் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்தார். ஆனால் முதல்வரின் பேச்சை மதிக்காத திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் முதல்வர் … Read more

பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன? வெளியான தகவல்

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று முதல்முறையாக இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். இந்த நிலையில் நேற்று மதியம் ஒன்றரை மணியளவில் மத்திய ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சரான கிரிராஜ் சிங்கை அமைச்சர் உதயநிதி டெல்லி கிருஷி பவனில், சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் மேம்பாடு, திறன் மேம்பாடு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான‌ … Read more

2022- 2023ம் நிதியாண்டில் வருமான வரிச் செலுத்துவோர் சலுகைகள் பெறுவது எப்படி?

2023- 2024ம் நிதியாண்டில் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி கிடையாது என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், நடப்பு 2022- 2023ம் நிதியாண்டில் வருமான வரிச் செலுத்துவோர் சலுகைகள் பெறுவது எப்படி? பழைய முறையைத் தொடரலாமா? அல்லது புதிய முறைக்கு மாறுவது சிறந்ததா? என விரிவாகப் பார்ப்போம்! நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், பழைய முறை மற்றும் புதிய முறையில் … Read more

100 ஆண்டுகள் கண்ட சென்னை மாநகராட்சி மாமன்றம்… முதல் முதலாக ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் 100 ஆண்டுகளைக் கடந்த பெருமை வாய்ந்தது. தற்போதைய சென்னை மாநகராட்சியின் மேயராகப் பிரியா பதவி வகிக்கிறார். சென்னை மாநகராட்சியின் வார்டு பிரச்னை குறித்து விவாதிக்கும் மாமன்ற கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். அதன்படி, இந்தமாத மாமன்ற கூட்டம் நேற்று சென்னை மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையின் உள்ள மாமன்ற அரங்கத்தில் நடைபெற்றது. மேயர் பிரியா எப்பொழுதும் மன்றக்கூட்டம் திருக்குறளுடன் தொடங்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஜனவரி மாதம் நடந்து … Read more

புதிய வகை கரோனா தொற்று உருவாகி பரவ வாய்ப்பு – சவுமியா சுவாமிநாதன் தகவல்

சென்னை: புதிய வகை தொற்று உருவாகி பரவ வாய்ப்பிருப்பதால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார். தேசிய அறிவியல் தினத்தையொட்டி, சென்னை தரமணியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் ‘பேரிடரில் இருந்து கற்றுக்கொண்ட அறிவியல் பாடங்கள்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற பிறகு சவுமியா சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா சூழல் முடிந்தது என சொல்ல முடியாது. … Read more

ஆந்திராவில் 175 தொகுதியிலும் தனித்து போட்டியிட தயாரா? – எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் ஜெகன் சவால்

தெனாலி: ஆந்திர மாநிலத்தில் வரும் 2024-ம் ஆண்டு 175 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, இம்முறையும் வழக்கம்போல் தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் கூட்டணி அமைத்து களத்தில் இறங்க உள்ளன. ஆனால், இப்போது ஜனசேனா கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. ஒருவேளை தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக கூட்டணி … Read more

ஜி20 வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு இன்று தொடங்குகிறது!

ஜி 20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பு வகிக்கும் நிலையில், இன்றும் நாளையும் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஜி 20 உறுப்பு நாடுகள் உள்பட 35 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்று சர்வதேச ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்க உள்ளனர். இந்த மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சர் சீன் கங் (Qin Gang) நாளைய அமர்வில் பங்கேற்கிறார். உலகளாவிய பொருளாதாரத்திற்கு நிலவும் சவால்களின் மீது ஜி20 அமைப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று சீனா … Read more