Rolex எனும் ஆடம்பர பிராண்டை உருவாக்கிய வறுமையில் வாடிய ஜேர்மானியர்!

தனது குழந்தை பருவத்தில் பெற்றோரை இழந்து அனாதையான ஒருவர், வறுமையின் வாடிய ஒருவர், இன்று உலகின் மிகப்பெரிய கைக்கடிகார பிராண்டு Rolex-ஐ உருவாக்கியவர் என்பது தெரியுமா? அவரைப்பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள். Rolex-ஆடம்பரத்தின் அடையாளமாக ரோலக்ஸ் (Rolex) சந்தையில் கிடைக்கும் மிகவும் ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த கடிகாரங்களில் ஒன்றாகும் என்பதை ஆடம்பரக் கடிகாரங்களின் எந்தவொரு அறிவாளியும் ஒப்புக்கொள்வார். இந்த பிராண்ட் ஒரு கல்ட்-கிளாசிக் மற்றும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகிறது. Rolex உலகின் முதன்மையான … Read more

ஜவளகிரி வனப்பகுதியில் விலங்குகள் தாகம் தீர்க்க குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், ராயக்கோட்டை, அஞ்செட்டி, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை,  உரிகம், ஜவளகிரி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் காட்டு யானைகள், மான்கள், காட்டு எருமைகள், சிறுத்தைகள், மயில் மற்றும் ஆயிரக்கணக்கான பறவை இனங்கள் உள்ளிட்ட வன உயிரினங்கள் வாழ்கின்றன. தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் வனப்பகுதியில் வாழும் வன விலங்குகள் மற்றும் பறவை இனங்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீரை நிரப்பும் பணிகளில் ஈடுபட்டு … Read more

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வுகளில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை: பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: இன்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஹோலி பண்டிகையின் போது நீதிமன்ற வளாகத்தில் ஆபாச நடனம்: டெல்லி ஐகோர்ட் கடும் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஆபாச நடன நிகழ்ச்சிக்கு டெல்லி ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் டெல்லி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ஹோலி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 6ம் தேதி ஹோலி மிலன் விழா நடைபெற்றது. விழா மேடையில் சினிமா பாடலுக்கு பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடினார். அதனை … Read more

விஷப்பொடி தூவி காகங்கள் தொடர் கொலை… பிரியாணி கறிக்காக நடந்த கொடூரமா? கோவையில் பயங்கரம்!

பொள்ளாச்சி அருகே பெரிய கவுண்டனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக, விஷம் கலந்த பொடியை தூவி காகங்களை கொன்றுவந்துள்ளார் ஒருவர். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி அருகே பெரிய கவுண்டனூர் உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில், கடந்த சில தினங்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து வந்துள்ளன. பின்னர் இறந்து விழுந்த காகங்கள் சிறிது நேரம் கழித்து தொடர்ச்சியாக காணாமலும் போயுள்ளன. காகங்கள் மாயமாகியதால், இறந்த காகங்களை மர்ம … Read more

சினிமா பத்தி என்கிட்ட பேசாதீங்க…. – உதறிய உதயநிதி

சென்னை : ரெட் ஜெயன்ட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். சினிமா தொடர்பாக இனி யாரும் என்னிடம் பேசாதீர்கள் என நடிகரும், அமைச்சருமான உதயநிதி தெரிவித்துள்ளார். மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் 'கண்ணை நம்பாதே'. நாயகியாக ஆத்மிகா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா, பூமிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மார்ச் 17ல் படம் ரிலீஸாகிறது. இப்படம் தொடர்பாக உதயநிதி கூறுகையில், ‛‛கிரைம் கலந்த திரில்லர் படத்தில் நடிக்க ஆசை. அப்படி அமைந்த படம் தான் இது. நான்கு … Read more

அதிகரிக்கும் நெருக்கடி… குறைந்தபட்ச கடனாவது தாங்க… கையேந்தும் பாகிஸ்தான்!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு தற்போது அமெரிக்கா நினைவுக்கு வந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாளர் நிலை ஒப்பந்தத்தில் தாமதம் அரசாங்கத்தை பதற்றம் அடைய செய்துள்ளது. இந்நிலையில், முடங்கிய கடன் திட்டத்தை பெற, அமெரிக்காவின் உதவியை நாட முடிவு செய்துள்ளார். நிதி அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அமைப்பின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக நம்புவதால், அமெரிக்காவின் உதவியை நாட அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலதாமதத்தால் கலக்கம் அடைந்துள்ள அரசு  ஊழியர்கள் நிலை … Read more

நாளை பணம் கொண்டு வாருங்கள்… டோக்கன் செல்லாது… ஈரோடு கிழக்கு மீம்ஸ் வைரல்

நாளை பணம் கொண்டு வாருங்கள்… டோக்கன் செல்லாது… ஈரோடு கிழக்கு மீம்ஸ் வைரல் Source link

"நலத்திட்டங்களைக் கொண்டு சேர்ப்பது எங்கள் பணி; கூட்டணி குறித்து முதல்வர் முடிவுசெய்வார்" ஐ.பெரியசாமி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திட்ட இயக்குநர் தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “2021-2022 – 2022-2023 நிதியாண்டுகளில் அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி ஊராட்சி வளர்ச்சி திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், முதல்வரின் கிராமப்புறச்சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் … Read more

மார்ச் 21-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: அரசு தலைமை கொறடா அறிவிப்பு

சென்னை: வரும் மார்ச் 21ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21.03.2023 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று … Read more