விமானப் பயணத்தை ரத்து செய்தால் எவ்வளவு கட்டணம் பிடித்தம்? – கனிமொழி சோமு எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: விமானப் பயணத்தை ரத்து செய்தால் எவ்வளவு கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என மாநிலங்களைவையில் திமுக எம்.பி கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு, “பயணத்தை ரத்து செய்வதற்கான கட்டணங்களை அரசு வரைமுறைப்படுத்துவதில்லை” என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார். மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட கூட்டம் கடந்த மாதம் 10-ம் தேதி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் திங்கள்கிழமை காலை … Read more

அதானி விவகாரம்; நிர்மலா சீதாராமனை பொளந்த சு.வெங்கடேசன்.!

மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அதானி குழுமம் வங்கிகளில், அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களில் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் தீபக் பைஜ் என்கிற உறுப்பினர் கேள்வி (எண் 177/13.03.2023) எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளின் கடன் குறித்து எந்த விவரத்தையும் தரவில்லை. ரிசர்வ் வங்கி சட்டம் 1934 பிரிவு 45 E இன் படி வங்கிக் கடன் குறித்த விவரங்கள் ரகசியமானவை, அவற்றை வெளியிட … Read more

வடகிழக்கு மாநிலங்களின் ஃபார்முலா கேரளாவில் அமல்; பாஜக புதிய வியூகம்.!

வடகிழக்குக் கிழக்கில் வெற்றி வாகை சூடிய பாஜக, அதேபோல் கேரளாவை வெல்வதற்கான முனைப்பில் இறங்கியுள்ளது. இரண்டு முக்கிய இந்து அல்லாத சமூகங்களான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அரவணைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் மக்கள்தொகையில் 46 சதவீதத்தை உள்ளடக்கிய கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள், அம்மாநிலத்தின் வெற்றிக்கு முக்கிய வாக்கு வங்கியாக உள்ளனர். இவர்களின் வாக்கு வங்கியை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அறுவடை செய்து வருகிறது. பாரம்பரியமாகவே இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸின் கோட்டையாக இருக்கும் ஒரு மாநிலத்தை … Read more

RRR: ஆஸ்கார் விருதில் இப்படி ஒரு அரசியல் இருக்கா ? புட்டுப்புட்டு வைத்த பிரபலம்..!

திரைத்துறையை பொறுத்தவரை உலகிலேயே மிகவும் உயரிய விருது என்றால் அது ஆஸ்கார் விருது தான். கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இசைப்புயல் ரஹ்மான் இரண்டு விருதுகளை வாங்கி தமிழர்கள் அனைவரையும் பெருமை படுத்தினார். உலகளவில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசி அசத்தினார் ரஹ்மான். அதன் பின் தற்போது இசையமைப்பாளர் கீரவாணி RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கார் விருதை பெற்றுள்ளார். … Read more

வீட்டில் விளக்கேற்றும் போது இந்த தவறுகளை செய்கின்றீர்களா? சற்று கவனத்துடன் இருங்க!!

காலையும் மாலையும் விளக்கு ஏற்றுவது நமது வீட்டில் முக்கியமான சம்பிராதாயங்களுள் ஒன்றாகியுள்ளது. தீபத்தில் மூன்று தேவிகளான துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் ஒளிமயமான முன்னேற்றம் வீட்டில் கிடைக்கின்றது. தீபம் ஏற்றி தினமும் பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்க முடியும். இது உள்ளத்தின் இருளை போக்குகிறது. வாழ்வில் உயரத்தை கொடுக்கின்றது. மனதில் ஏற்படும் கவலை, துன்பங்கள், தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதனால் தான் தினமும் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற … Read more

தன்பாலின உறவாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் ரத்த தானம் செய்ய தடை! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம்

டெல்லி: மூன்றாம் பாலினத்தவர், தன்பாலின உறவாளர்கள், பாலியல் தொழிலாளர்கள் ரத்த தானம் செய்யத் தடை விதித்துள்ளது குறித்து மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பொதுவாக மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். இதனால் ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தம் தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் ரத்த தானம் செய்ய முடியும்.  பொதுவாக  ரத்த தானத்தின்போது 350 மில்லியை மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 பேரைக் காப்பாற்ற … Read more

திருப்புவனம் பகுதியில் குறைந்து வரும் வெற்றிலை சாகுபடி: சாகுபடி பரப்பளவை அதிகரிக்க கோரிக்கை

திருப்புவனம்: திருப்புவனத்தை சுற்றியுள்ள பழையூர், கலியாந்தூர், நயினார்பேட்டை, வெள்ளக்கரை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டிருந்தனர். மதுரை மார்கெட்டில் சோழவந்தான் வெற்றிலைக்கு அடுத்த படியாக திருப்புவனம் வெற்றிலைக்கு கிராக்கி உண்டு. ஆயிரம் ஏக்கருக்கு மேல் சிறுகாமணி, கற்பூரம், நாட்டு வெற்றிலை என ஏராளமான ரகங்கள் விவசாயிகள் பயிரிட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில் வெற்றிலையில் நோய் தாக்குதல், இயற்கை பேரிடரால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு … Read more

மார்ச் 22-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 22-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

மகாராஷ்டிரா முதல்வரின் யாத்திரையின் போது பெண் நிர்வாகிக்கு எம்எல்ஏ முத்தம் கொடுத்தாரா?: வீடியோ வைரலால் பரபரப்பு

மும்பை: சிவசேனா கட்சியின் எம்எல்ஏ பிரகாஷ் சர்வேயும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷீத்தல் மாத்ரேவும் முத்தமிட்டுக் கொண்ட வீடியோவானது இணையங்களில் வைரலாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆசிர்வாத யாத்திரையின்போது சிவசேனா கட்சி எம்எல்ஏ பிரகாஷ் சர்வே மற்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷீத்தல் மாத்ரே ஆகியோர் கலந்துகொண்டனர். இதுதொடர்பான வீடியோவில், முதல்வர் ஷிண்டே உள்ளிட்ட அக்கட்சியின் பிரமுகர்கள், வேனில் நின்றபடி இருபுறம் உள்ள மக்களுக்கு கையசைத்துக் கொண்டே செல்கின்றனர். சிவசேனா கட்சி எம்எல்ஏ … Read more

இத்தாலி சொகுசு கார் நுழைவு வரி விவகாரம்: உயர்நீதிமன்றத்தை நாடிய ஹாரிஸ் ஜெயராஜ்!

இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மசராட்டி சொகுசு காரின் நுழைவு வரிக்கான அபராதத்தை செலுத்தும்படி, தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை விதிக்கக் கோரி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கடந்த 2010-ம் ஆண்டு மசராட்டி (Maserati Granturismo S Coupe) எனும் சொகுசு காரை இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்தார். அதை தமிழகத்தில் ஓட்டுவதற்கு ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட … Read more