“சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் என்பது பிரமாண்ட அறிவிப்பு” – புதுச்சேரி பட்ஜெட்டுக்கு தமிழிசை பாராட்டு

புதுச்சேரி: சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியமாக வழங்கப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் வெளியிடப்பட்டிருப்பது பிரமாண்டமான அறிவிப்பு என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டியுள்ளார். மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கள விளம்பரப் பிரிவு புதுச்சேரி சார்பில் “பெண்கள் உரிமைகளும் பாலின சமத்துவமும்” கண்காட்சி புஸ்ஸி வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு … Read more

தன்பாலின திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்

புதுடெல்லி: தன்பாலின திருமணத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது இயற்றப்பட்ட 377-வது சட்டப் பிரிவின்படி தன்பாலின உறவு குற்றமாகக் கருதப்பட்டது. இதைஎதிர்த்து உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியாக ‘‘தன்பாலின உறவு குற்றமல்ல’’ என்று கடந்த 2018-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக் களும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கடந்த ஜனவரி 6-ம் தேதி உத்தரவிடப்பட்டது. … Read more

இது அந்த பல்டி..! பாஜக மாநில நிர்வாகி திமுகவில் சேர்ந்தார்… கமலாலயத்தில் பரபர..!

பாஜக-வில் பல ஆண்டுகளாக கடுமையாக வேலை செய்தவர்களுக்கு மரியாதை இல்லை எனவும் மாநில அரசின் செயல்பாடு மீது ஈர்ப்பு ஏற்பட்டு திமுகவில் இணைந்ததாகவும் சிவபாலன் பேட்டி கொடுத்துள்ளார். தமிழக பாஜகவை சேர்ந்த பலர் அண்மை காலமாக , அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இது அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவை தனியே கழட்டி விடப்படும் நிலை நெருங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளாக பாஜக-வில் தீவிரமாக பணியாற்றி … Read more

Legend Saravanan: உச்ச நட்சத்திரங்களுக்கே டஃப் கொடுக்கும் லெஜண்ட் சரவணன்: மாஸ் காட்டுறாரே.!

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் பிரபல நடிகைகளுடன் ஆட்டம் போட்டு இளைஞர்களை கடுப்புக்கு உள்ளாக்கியவர் சரவணன் அண்ணாச்சி. ஆனால் அவர் விளம்பர படங்களில் நடித்ததே திரைப்படங்களில் நடிப்பதற்கான முன்னோட்டம் தான் என்பது அப்போது அவர்களுக்கு தெரியவில்லை. விளம்பர படங்களில் நடித்து வந்த லெஜண்ட் அண்ணாச்சி முதன்முறையாக திரைத்துறையில் தடம் பதித்தார். தனது முதல் படமே பிரம்மாண்டமாக வெளியாகும் என விரும்பினார் லெஜண்ட் அண்ணாச்சி. அதன்படி தனது முதல் படமான தி லெஜண்டை தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு … Read more

அதானி விவகாரம் : நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வலியுறுத்தி நாட்டின் பல்வேறு நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வலியுறுத்தி, நாட்டின் பல்வேறு நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதானி குழுமத்திற்கு எதிராக, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம், கணக்கு மோசடி மற்றும் பங்கு மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்தில் இன்று, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பின. சண்டிகர், மத்தியபிரதேசம், ஒடிசா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டினர். … Read more

சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு வாங்கிய HSBC வங்கி!

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு HSBC வங்கி வாங்கியுள்ளது. வெறும் 1 பவுண்டுக்கு கைப்பற்றியது திவாலாகி பெரும் நெருக்கடியில் சிக்கிய அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய துணை நிறுவனத்தை (Silicon Valley Bank UK Limited) வெறும் 1 பவுண்டுக்கு (இலங்கை பணமதிப்பில் ரூ.399) வாங்குவதாகக் கூறியுள்ளது. சிலிக்கான் வேலி வங்கி, பிரித்தானியாவில் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனமாக இயங்கி வருகிறது. இரண்டே நாட்களில் … Read more

நீதி, வருவாய்த்துறை அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கியது செல்லாது! உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழ்நாடு அரசு, நீதி, வருவாய்த்துறை அதிகாரங்களை காவல் துணை ஆணையர்களுக்கு  வழங்கிய நிலையில், அது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீதித்துறை, வருவாய்த்துறையில்  நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோர்மீது, துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணைகள் வெளியிட்டது. இதை எதிர்த்து தாக்கப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், நீதித்துறை, வருவாய்த்துறையில்  நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோர்மீது, காவல்துறை துணை ஆணையர் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கி தமிழ்நாடு … Read more

கடையம் அருகே நெகிழ்ச்சி; வடமாநில பெண்ணுக்கு `வளைகாப்பு’ வைபவம்: கறி விருந்து, ஆட்டத்துடன் கொண்டாட்டம்

கடையம்: தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடையம் அருகேயுள்ள வடக்கு மடத்தூர் என்ற கிராமத்திலுள்ள பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் கொல்கத்தாவை சேர்ந்த 7 குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அந்த சூளையில் வேலை பார்த்து வரும் பொறி – தோனியம்மா என்ற தம்பதி திருமணம் செய்துள்ள நிலையில் … Read more

வாழப்பாடி அருகே அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

வாழப்பாடி: வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர். ஆத்தூரிலிருந்து சேலம் நோக்கி சென்ற பேருந்து பைக் மீது மோதியதில் யுவராஜ் (22), வசந்தகுமார் (22) உயிரிழந்தார்.

தந்தையால் பாலியல் தொல்லை விவகாரம் மகளிர் ஆணைய தலைவியை ‘நார்கோ டெஸ்ட்’ செய்ய வேண்டும்: மாஜி கணவர் வெளியிட்ட பகீர் தகவல்

புதுடெல்லி: தனது தந்தையால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியை நார்கோ டெஸ்டுக்கு உட்படுத்த வேண்டும் என்று அவரது முன்னாள் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் கடந்த சில தினங்களுக்கு முன் ெவளியிட்ட பதிவில், ‘நான் சிறுமியாக இருந்த போது எனது தந்தை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் என்னை அடித்தார். அதனால் நான் கட்டிலுக்கு அடியில் சென்று படுத்துக் கொண்டேன்’ என்று தனக்கு … Read more