தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்: அடுத்த மாதத்தில் முடிகிறது பணி| The Smart City project in Tamil Nadu will be completed next month

புதுடில்லி : தமிழகத்தின் எட்டு நகரங்கள் உட்பட நாடு முழுதும், 22 இடங்களில் நடந்து வரும், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் அடுத்த மாதத்தில் முடிவடைகின்றன. மீதமுள்ள 78 நகரங்களில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட உள்ளன. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாசு ஏற்படுத்தாத வகையிலும், தொழில்நுட்ப உதவியுடன் கூடிய தீர்வுகள் அளிக்கக் கூடியதாக நகரை மாற்றும் வகையிலும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால், 2015ல் அறிவிக்கப்பட்டது. இதன்படி நாடு முழுதும் 100 நகரங்கள் … Read more

எல்லா படங்களும் பான் இந்தியா படங்களாவதில்லை : நானி

தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நானி. வெப்பம் என்கிற நேரடி தமிழ் படத்தில் நடித்தார், நான் ஈ, ஷியாமா சிங்கராய் உள்ளிட்ட மொழிமாற்று படங்களின் மூலம் இங்கும் பிரபலமானார். தற்போது அவர் தெலுங்கு, தமிழில் உருவாகும் 'தசரா' என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, சாய்குமார் உள்ளபட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் ஒதெல்லா இயக்கி உள்ளார். வருகிற 30ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தின் … Read more

மறைந்து இருந்து பெண்களை முத்தமிடும் 'சீரியல் கிஸ்ஸர்'

பாட்னா பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில், இளம் பெண் ஒருவரை மர்ம மனிதன ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இதுகுறித்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஜாமுய்யில் உள்ள சதார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்த சம்பவம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. குற்றவாளி மருத்துவமனை சுவர் ஏறி குதித்து உள்ளார். அந்த பெண் மொபில் போனில் பேசிக்கொண்டு வந்து உள்ளார். திடீர் … Read more

பெண்கள் பிரிமீயர் லீக்: வெற்றிக்கணக்கை தொடங்குமா பெங்களூரு…டெல்லியுடன் இன்று மோதல்…!

மும்பை, முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியட்ஸ், குஜராத் ஜெய்ண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் … Read more

போருக்கு மத்தியில் புதினை சந்திக்க சீன அதிபர் ரகசிய திட்டம்…?

பீஜிங், சீனாவின் அதிபராக பதவி வகித்து வந்த ஜீ ஜின்பிங் போட்டியின்றி, மூன்றாவது முறையாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். சீனாவின் மத்திய ராணுவ ஆணைய தலைவராகவும் ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபர் பதவியில் 2 முறையே நீடிக்க முடியும் என்று இதுவரை இருந்து வந்த விதிமுறைகள் திருத்தப்பட்டன. இதனால், 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் அந்த பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமீப சீன வரலாற்றில் சக்தி … Read more

கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்ற கொடூர தாய்!!

கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் ஒருவர் பெற்ற குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சலிம்பாய் வாகேர் – ஹூசேனாவுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ரெஹான், ஆர்யன் என்ற இரண்டு ஆண் குழந்தைகள். இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்படவே ஹூசேனா கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், ஹூசேனாவுக்கு ஜாகிர் பக்கீர் … Read more

கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம் விலை!!

திண்டுக்கலில் வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்துள்ளது. ஆனால் இந்த விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேனி, கம்பம், நிலக்கோட்டை, தாராபுரம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து திண்டுக்கல் வெங்காய சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இங்கு வரக்கூடிய சின்ன வெங்காயத்தை ஏலம் எடுக்கும் வியாபாரிகள் திருச்சி, தஞ்சை, சென்னை, கோவை, மதுரை மற்றும் கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படும். கடந்த 1ஆம் … Read more

“அதானியின் நம்பகத்தன்மை கிழிந்து தொங்குகிறது; சட்டத்தை திருத்துங்கள் நிதியமைச்சரே!" – சு.வெங்கடேசன்

அதானி குழுமத்தின் மோசடிகள் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில், அரசு இன்சூரன்ஸ் நிறுவனம், வங்கிகளில், அதானி குழுமம் வாங்கிய கடன் குறித்த விவரங்களை வெளியிடுமாறு, நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் கேள்வியெழுப்பினார். அதானி – மோடி அதற்கு, `ரிசர்வ் வங்கி சட்டப்படி அதனை வெளியிட முடியாது’ என மத்திய … Read more

கிணறு வெட்ட வைக்கப்படவிருந்த வெடிமருந்து வெடித்ததில் இளைஞர் பலி

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே கிணறு வெட்டுவதற்காக வைக்கப்படவிருந்த வெடிமருந்துகள் வெடித்ததில் இளைஞர் உயிரிழந்தார். வடப்பருத்தியூரில் செல்லத்துரை என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது.  அதற்கு தேவையான வெடி மருந்துகளை கிணற்றிற்கு அருகே தகர ஷெட் அமைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை எட்டு மணி அளவில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்ட நபர், அந்த வெடி மருந்து இருந்த செட்டிற்கு சென்றுள்ளார் அப்போது பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்துள்ளது. அதில் … Read more