புதுச்சேரியில் காவலர் உடல் தகுதி தேர்வு தொடக்கம்; குறுக்கு வழியை பின்பற்ற வேண்டாம் என அமைச்சர் அறிவுரை

புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையில் 253 காவலர், 26 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் காவலர் பணியிடங்களுக்கு 14 ஆயிரத்து 173 பேரும், ஓட்டுநர் பணியிடத்துக்கு 881 பேரும் விண்ணப்பித்தனர். அவற்றில் தகுதியான 14 ஆயிரத்து 45 பேர், ஓட்டுநர் பணிக்கு 877 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இவர்களுக்கான உடல்தகுதி தேர்வு கோரிமேடு காவலர் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் நாளில் 500 பேர் இத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இத்தேர்வினை அமைச்சர் நமச்சிவாயம் … Read more

தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கிட்டுமா? – 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வசமானது முடிவு

புதுடெல்லி: தன்பாலின திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கோரி தொடரப்பட்டுள்ள வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இயற்றப்பட்ட 377-வது சட்டப் பிரிவின்படி தன்பாலின உறவு குற்றமாகக் கருதப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியாக ‘‘தன்பாலின உறவு குற்றமல்ல’’ என்று கடந்த 2018-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கோரி தாக்கல் … Read more

தமிழக கிராமப்புற சாலைகளை மேம்படுத்த 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி.. அமைச்சர் பெரியசாமி முக்கிய அப்டேட்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திட்ட இயக்குனர் தண்டபாணி, ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் கடந்த 2021 – 2022 மற்றும் 2022 – 2023 நிதியாண்டுகளில் அண்ணா கிராம மறுமலர்ச்சி … Read more

சீனாவை அடக்க தைவான் பிரச்சனையை கையில் எடுக்கும் மேற்கத்திய நாடுகள்.!

தைவானுக் நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பங்களை வழங்குவதற்காக இங்கிலாந்து செய்துள்ள செலவு மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது சீனாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வருடம் கடந்தும் இன்னும் உக்ரைன் போர் முடிவடையவில்லை. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் வழங்கும் நிதி, ஆயுத உதவிகளால் போர் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ரஷ்யாவிற்கு வெகு தொலைவில், சம்பந்தமே இல்லாத இடத்தில் இருக்கும் அமெரிக்கா, ரஷ்ய எல்லையில் தனது படைகளை நிறுத்த உக்ரைனை தூண்டியதின் விளைவாக இந்த போரை ரஷ்யா தொடங்கியது. அமெரிக்காவின் … Read more

நிதி நெருக்கடியால் இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகும் – ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க சூசகம்

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க சூசகமாக தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் மார்ச் 9ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த  நிலையில், தேர்தலை நடத்துவதற்கு அரசு நிதி ஒதுக்காததால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டதால், வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதியன்று தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக … Read more

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

லண்டன்; இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அவ்வாறு வருபவர்கள், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்தார். இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்ட விரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இருந்தும் ஏராளமானோர் அதிகரித்து வருகின்றனர். மேலும், சிறிய படகுகளில் சட்டவிரோதமாக கடக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை இங்கிலாந்தில் கணிசமான அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உளளது. சிறிய படகுக;ள மூலம் ஆங்கில கால்வாயைக் கடந்து இங்கிலாந்து கரைகளில் இறங்கும் இந்தியர்களின் … Read more

பேத்தியின் குழந்தையை பார்க்க வந்த ஆக்கர் கடை தொழிலாளி விபத்தில் பலி: வெள்ளமடம் அருகே கண்டெய்னர் லாரி மோதியது

ஆரல்வாய்மொழி: திருநெல்வேலி மாவட்டம் கள்ளிகுளம் பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை. ஆசாரிப்பள்ளம் அருகே உள்ள ஒரு ஆக்கர் கடையில் வேலை பார்த்து வந்தார். அவரது மகனின் மகளான பேத்திக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. குழந்தை பார்க்க அய்யாத்துரை இன்று காலை கள்ளிகுளத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஆசாரிப்பள்ளம் நோக்கி புறப்பட்டுள்ளார். வெள்ளமடம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது வெள்ளமனம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்ட் அருகே வரும் போது நாகர்கோவிலில் இருந்து, … Read more

சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் 6 வாரத்தில் ரூ.5,09,16,000 அபராதம் வசூல்: போக்குவரத்து காவல்துறை தகவல்

சென்னை: சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் 6 வாரத்தில் ரூ.5,09,16,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 6 வாரங்களில் 4,922 வழக்குகள் தீர்க்கப்பட்டு 5 கோடி ரூபாய்க்கு மேல் போக்குவரத்து காவல்துறை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல் வழக்குகளை முடிக்க சென்னை பெருநகரில் 10 இடங்களில் அழைப்பு மையங்கள் உள்ளது.

ஆபாசமான கருத்துகளை வெளியிட்ட விவகாரம் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: இருதரப்பு மீது வழக்குபதிந்து போலீஸ் விசாரணை

சந்திரபூர்: மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டம் சிமூர் தொகுதி பாஜக எம்எல்ஏ கீர்த்திகுமார் மீது போலீசில் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், ‘எம்எல்ஏ கீர்த்திகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20 பேர் எனது வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த எனது கணவரை இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர். … Read more