ஆஸ்கர் விருது விழா – தீபிகா படுகோனேவைப் பாராட்டிய கங்கனா ரணவத்

பாலிவுட்டின் பரபரப்பான கதாநாயகிகளில் ஒருவர் கங்கனா ரணவத். அவ்வப்போது சர்ச்சைக்குரிய செய்திகளில் அடிபடுபவர். பாலிவுட்டின் நெப்போட்டிச அதிகார மையத்தை கடுமையாக எதிர்ப்பவர்களில் ஒருவர். தனது சுய திறமையால் முன்னேறி இன்று பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கங்கனா. அவ்வளவு சுலபத்தில் சக நடிகர், நடிகையரைப் பாராட்டிவிட மாட்டார். ஆனால், இன்று சக பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனேவைப் பாராட்டியுள்ளர். நடைபெற்று முடிந்து 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவராக இடம் பெற்று … Read more

நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் எழுப்பினாலே மைக் அணைக்கப்படுகிறது; கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜனவரி 29-ந்தேதி தொடங்கி நடந்தது. பிப்ரவரி 1-ந்தேதி, மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார். இதன்பின்னர், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இதனையடுத்து, பிப்ரவரி 11-ந்தேதியுடன் முதல் அமர்வு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. இதன்படி, இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின. ஏப்ரல் 6-ந்தேதி வரை … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி…!

வெல்லிங்டன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூலாந்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. ஜூன் 7ம் தேதி லண்டனில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. தினத்தந்தி Related Tags : Cricket கிரிக்கெட்

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றது..!

லாஸ் ஏஞ்சல்ஸ், டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்தத் திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், ‘ஒரிஜினல் பாடல்’ என்ற விருதின் பிரிவில் 15 பாடல்களில் ஒன்றாக இறுதிப் … Read more

ரஜினி பாராட்டு விழா திடீர் ரத்து!!

நடிகர் ரஜினிகாந்துக்கு வரும் 26ஆம் தேதி நடத்தப்பட இருந்த பாராட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் வரும் 26ஆம் தேதி அவருக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டிருந்தனர். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர். விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு பாராட்டு மற்றும் நலிந்த ரஜினி ரசிகர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருந்தது. நிகழ்ச்சியை வேலூர் ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் … Read more

மாமியாரின் கொடூரச் செயலால் கண்பார்வை இழந்த மருமகள்!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் – கடலூர் சாலையில் வசித்து வருபவர் முகேஷ்ராஜ். இவருக்கும் கிருத்திகா என்பவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. முகேஷ்ராஜ் அவிநாசியில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாயார் ஆண்டாள் (55). இவருக்கு இவரது மருமகள் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கிருத்திகா இன்று அதிகாலையில் வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டு கழிவறையில் … Read more

பிரிட்டன் அரசை விமர்சித்த தொகுப்பாளர் பணியிடை நீக்கம்| மொசாம்பிக்கில் சூறாவளி – உலகச் செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு நிறுவனங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்த வழக்கில் முன்னால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பெயில் இல்லாத கைது வாரண்ட்டை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இன்ரான்கானின் கட்சி தெஹ்ரீக்-இ-இன்சாப் அவரின் கைது நடவடிக்கைக்கு எதிராக மனுத்தாக்கல் செய்ததில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. சிலிகான் வேலி வங்கி திவாலானதையடுத்து, கலிபோர்னியா ஆளுநரான கேவின் நியூசாம் (Gavin Newsom) -யிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடர்பு கொண்டு பேசினார். … Read more

தனியாக நின்ற நபரை தாக்கி, கூகுள் பே செயலி மூலம் ரூ.50,000 பணம், தங்க மோதிரம் பறிப்பு – சகோதரர்கள் கைது

தூத்துக்குடி அருகே தனியாக நின்ற நபரை தாக்கி, அவரிடமிருந்து கூகுல் பே செயலி மூலம் பணத்தை பறித்துச் சென்ற சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி, பொட்டல் காடு பகுதியில், தனது இருசக்கர வாகனத்தோடு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், பாலாஜியை தாக்கியதுடன், அவரிடமிருந்த ஸ்மார்ட் வாட்ச், தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, அவரது செல்போனிலிருந்து கூகுள் பே செயலி மூலம் தங்களது … Read more

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதா? – ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்க ஐகோர்ட் அனுமதி

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்பது குறித்து பதிலளிக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், “இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள … Read more