நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடக்கம்: 35 மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம்தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கி, ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பட்ஜெட் குறித்து விவாதம் நடத்தப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். இதனிடையே, 35 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அதானி குழுமம்மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை, பணவீக்கம் உயர்வு, சமையல் காஸ் விலை உயர்வு, வேலையின்மை விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட … Read more

அடுத்த கட்ட போருக்கு தயாராகும் சீனா; இந்தியாவிற்கு பகிரங்க எச்சரிக்கை.!

எல்லையில் துப்பாக்கியை பயன்படுத்த கூடாது என்பதால், இந்திய விரர்களை தாக்க மேம்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்களை சீனா வாங்கியுள்ளது. இதன் மூலம் கல்வான் மோதல் போன்று மேலதிக தாக்குதல் சம்பவங்கள் நடக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா சீனா இடையே கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளதாக்கில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வரை உயிரிழந்தனர். ஆனால் நான்கு பேர் தான் தங்கள் தரப்பில் இருந்து உயிரிழந்ததாக சீனா தெரிவித்தது. ஆனால் … Read more

Nokia c12: 5,999 ரூபாய்க்கு நோக்கியா போன் வாங்கலாம்! பட்ஜெட் செக்மென்டை கலக்க வந்துவிட்டது!

உலகில் ஒரு காலத்தில் நம்பர் 1 போன் நிறுவனமாக இருந்த பின்லாந்து நாட்டை சேர்ந்த Nokia நிறுவனம் தற்போதுபகாலப்போக்கில் மக்களால் மறக்கப்பட்டுவருகிறது. காலத்திற்கேற்ப மாறாத டிசைன், வசதிகள் மற்றும் மென்பொருள் காரணமாக நோக்கியா நிறுவனம் தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் போன் விற்பனை செய்ய திணறி வருகிறது. ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஆதிக்கம் வந்த பிறகு விற்பனை இல்லாமல் இந்த நிறுவனத்தை நோக்கியா மூடிவிட்டு சென்ற பிறகு அதே பின்லாந்து நாட்டை சேர்ந்த HMD Global நிறுவனம் … Read more

தாய்லாந்தில், தேசிய யானைகள் தினம் கொண்டாட்டம்.. விதவிதமான காய்கறிகள், பழங்கள் படைத்து யானைகளுக்கு விருந்து

தாய்லாந்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் யானைகள் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. பண்டைய காலம் தொட்டு, தாய்லாந்து கலாச்சாரத்தில் யானைகள் முக்கிய பங்காற்றிவருவதால், ஆண்டுதோறும் மார்ச் 13 ஆம் தேதி அங்கு யானைகள் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. சோன்புரி மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நோங் நூச் தாவரவியல் பூங்காவில், 26 அடி நீள மேஜையில், 3 டன் பழங்களும், காய்கறிகளும் படைக்கப்பட்டு, 60 யானைகளுக்கு பரிமாறப்பட்டன. Source link

விமான பயணத்தின்போது பயணி மரணம்.. சடலத்துடன் மீண்டும் டெல்லிக்கு திரும்பிய விமானம்

டெல்லியில் இருந்து கத்தார் தலைநகர் தோஹா சென்ற இண்டிகோ விமானம் பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது. இண்டிகோ 6E-1736 விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றுகொண்டிருந்தபோது பயணி ஒருவருக்கு மருத்துவ அவசரநிலை தேவைப்பட்டதன் காரணமாக கராச்சிக்கு திருப்பிவிடப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான நிலையம் சென்றவுடன் சம்பந்தப்பட்ட பயணி உயிரிழந்துவிட்டதாக விமான நிலைய மருத்துவக்குழுவினரால் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள விமான நிறுவனம், உயிரிழந்த செய்தியால் வருத்தமடைவதாகவும், இறந்தவரின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. Source link

வீட்டுச் சுவர்களில் வழிந்த திரவம்… பிரித்தானிய தம்பதியருக்கு காத்திருந்த ஆச்சரியம்

இங்கிலாந்திலுள்ள கென்டில் வாழும் ஒரு தம்பதி, தங்கள் வீட்டின் படுக்கையறையில் கருப்பாக ஒரு திரவம் வழிவதைக் கவனித்துள்ளார்கள். காத்திருந்த ஆச்சரியம் Kate மற்றும் Andrew Dempseyஎன்னும் அந்த தம்பதியர், வாசனை வீசும் அந்த திரவம் என்ன என கண்டுபிடிப்பதற்காக அவர்கள் வீட்டுக்குள் தளத்தில் பதிக்கப்பட்டிருந்த பலகைகளை அகற்றினால், அங்கே இராட்சத தேன் கூடுகள் இருப்பதைக் கண்டு வியப்பிலாழ்ந்துள்ளார்கள். அவற்றை அகற்ற, பணியாளர்களைத் தேடினால், அவர்கள் 10,000 பவுண்டுகள் கேட்டிருக்கிறார்கள். ஆகவே, நண்பர்கள் உதவியுடன் தாங்களே தேன்கூட்டை அகற்றும் … Read more

சென்னை தி.நகர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு 17ம் தேதி குடமுழுக்கு விழா! சேகர்ரெட்டி தகவல்

சென்னை: சென்னை, தி.நகரில்  புதியதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 17ம் தேதி நடைபெறும் என சேசகர் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த திருப்பதி திருமலை தேவஸ்தான தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி , பத்மாவதி கோவில் கட்டுமான … Read more

விளைநிலங்களில் புகும் காட்டுப்பன்றிகளை தடுப்பது எப்படி?.. வேளாண் மாணவிகள் விளக்கம்

ஆண்டிபட்டி: மதுரை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் 4ம் ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண்மை திட்டத்தின் கீழ், ஆண்டிபட்டி வட்டாரத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். மறவப்பட்டி கிராமத்தில் நடந்த பயிற்சியில் விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் மாணவி லிசானியா விளக்கம் அளித்தார். மேலும் இதனை கட்டுப்படுத்த அரசின் 40 சதவீதம் மானியத்துடன் சூரிய மின்வேலி அமைக்கலாம். வாத்து முட்டையை நீரில் கலத்து தெளிக்கலாம். முடித் துண்டுகளை பரப்பி … Read more

தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். பிரதான சாலைகளில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: ஏப். 18ல் விசாரணை..!

டெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரே பாலின உறவு சட்டத்துக்கு எதிரானது என்ற 377வது சட்டப்பிரிவை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டில் ஓரின சேர்க்கை குற்றமில்லை என தீர்ப்பளித்தது. அத்துடன் 377வது சட்டப்பிரிவை நீக்கி உத்தரவிட்டது. இதன் மூலம், நாடு முழுவதும் ஒரே பாலின உறவு சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஒரே பாலினத்தை … Read more