OLX மூலம் ஒரே வீட்டை 10க்கும் மேற்பட்டோரிடம் குத்தகைக்கு விட்டு மோசடி – கில்லாடி ஆசாமி கைது

மதுரை அருகே OLX மூலம் விளம்பரம் செய்து, ஒரே வீட்டை 10 க்கும் மேற்பட்டோரிடம் ஒத்திக்கு விடுவதாக, 70 லட்ச ரூபாய் மோசடி செய்த கில்லாடி ஆசாமியை போலீசார் கைது செய்தனர். மதுரை ஆனையூர் அருகே மலர்நகர் பகுதியைச் சேர்ந்த புகழ் இந்திரா என்பவர், தன்னுடைய  வீட்டினை ஒத்திக்கு விடுவதாக OLX மூலம் விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்த மதுரை ஆவின் நகர் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர், புகழ் இந்திராவை சந்தித்து 8 லட்ச ரூபாய் … Read more

தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச் சாவடிகளை உடனடியாக அகற்றுக: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: “ஒன்றிய அரசு உத்தேசித்துள்ள சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் காலவதியாகியுள்ள 32 சுங்கச் சாவடிகளையும், 60 கி.மீ. தூரத்திற்கு குறைவாக இருக்கும் சுங்க சாவடிகளையும், நகர்புறத்தில் இயங்கும் சுங்கச் சாவடிகளையும் உடனடியாக அகற்றிட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணத்தை வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் 5 … Read more

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1.25 கோடி இழப்பீடு – காப்பீட்டு நிறுவனத்துக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவு

மும்பை: வாகன டயர் வெடிப்பு இறைவன் செயல் அல்ல. ஓட்டுநரின் அலட்சியம்தான் என்பதால் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி பட்வர்தன் (38) என்பவர் புனே நகரிலிருந்து மும்பைக்கு 2 நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். நண்பர்களில் ஒருவருக்கு சொந்தமான அந்தக் கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது அதன்பின்பக்க டயர் வெடித்ததில் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் … Read more

எடப்பாடி மீதே வழக்கா.. வன்முறை வெறியாட்டம் நடக்கணுமா.. விஜயபாஸ்கர் எச்சரிக்கை.!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளார் கந்த சனிக்கிழமை, சிவகங்கை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் திரும்பிய சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த ராஜேஸ்வரன் தனது பேஸ்புக் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமியை வைத்துக் கொண்டு நேரலையில் வந்தார். அப்போது, துரோகத்தின் அடையாளம் எடப்பாடி. சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் … Read more

தெலுங்கு வருட பிறப்பு: திருப்பதி கோவிலில் மார்ச் 21, 22ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து…

திருப்பதி: தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில், மார்ச் 21, 22ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி  தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு   தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக  இலவச தரிசனம் மட்டுமின்றி கட்டண தரிசனங்களும் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில்,   தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு விஐபி தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு … Read more

கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்கு உதவும் வகையில் கனடா அரசு வெளியிட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி…

 கனேடிய புலம்பெயர்தல் நடைமுறை டிஜிட்டல் மயமாகிவருகிறது. நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது முதல், விரைவில் குடியுரிமை உறுதிமொழி எடுத்தல் ஒன்லைன் மூலமாகவே செய்யப்படலாம் என சமீபத்தில் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பு அறிவித்துள்ளது வரை எல்லாமே இணையம் வாயிலாக செய்யப்படும் நடைமுறைகளாக மாறிக்கொண்டே வருகின்றன. கனடாவுக்கு புலம்பெயர உதவுவதாகக் கூறும் மோசடி இணையதளங்கள் அதேநேரத்தில், இந்த நடைமுறைகள் குறித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, அவற்றைப் பயன்படுத்தி இணையம் வாயிலாக மோசடிகள் நடக்கவும் வாய்ப்புகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஆகவே, … Read more

புதுச்சேரியில் ரூ.11,600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் ரூ.300 சிலிண்டர் மானியம் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் துவங்கியது. இன்று காலை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2023-24ம் ஆண்டுக்கான ரூ.11,600 கோடிக்கு வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:அனைத்து குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களும் பயன்படும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 வீதம் ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு … Read more

இடஒதுக்கீடு கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்காமல் விடமுடியாது: ஐகோர்ட்

சென்னை: அரசு வேலைக்காக போலி சாதிச் சான்று அளித்து இடஒதுக்கீட்டு கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்காமல் விட முடியாது என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. கோவை வனமரபியல் நிறுவனம் பதவி உயர்வுக்கான சான்றிதழ் சர்பார்ப்பின்போது, பாலசுந்தரம் பழங்குடியினத்தவர் என்ற சான்றிதழை ரத்து செய்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தனது சாதிச் சான்றை தற்போது ஆய்வு செய்து ரத்து செய்ய சட்டபூர்வமானதல்ல எனக்கூறி பாலசுந்தரம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

முதல்வருக்கு திருமணமான ஓராண்டில் அமைச்சரை கரம்பிடிக்கும் பெண் ஐபிஎஸ் அதிகாரி: பஞ்சாப் ஆம்ஆத்மி கட்சியினர் மகிழ்ச்சி

அமிர்தசரஸ்: பஞ்சாப் அமைச்சரை, அம்மாநிலத்தில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவ் திருமணம் செய்து கொள்ள உள்ளதால் ஆம்ஆத்மி கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பஞ்சாப் மாநில ஆம்ஆத்மி மூத்த தலைவரும், கல்வி அமைச்சருமான ஹர்ஜோத் பெய்ன்ஸுக்கும், ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நிச்சயம் ெசய்யப்பட்டது. இவர்களுக்கு இம்மாதம் திருமணம் நடைபெற உள்ளது. 2019 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஜோதி யாதவின் குடும்பத்தினர் குருகிராமில் வசித்து வருகின்றனர். தற்போது இவர், மான்சா … Read more

பழனி: வெடிமருந்து வைத்து கிணறு தோண்ட முயன்ற தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்!

பழனி அருகே கிணறு தோண்டும் பணியின்போது வெடி வெடித்ததில் தொழிலாளி ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவ சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வடப்பருத்தியூர் கிராமத்தில் உடுமலைபேட்டையை சேர்ந்த விவசாயி செல்லத்துரை என்பவரின் சொந்தமான தோட்டத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்ததது. அப்போது ஆழமாக வெட்டும் போது பாறைகள் இருந்ததால் வெடி வைத்து தகர்க்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கிணறு வெட்டும் பணியிலிருந்த கள்ளிமந்தயத்தை சேர்ந்த சின்னராஜ் மகன் மணி (30) … Read more