ராகுல் காந்தியால் நாட்டுக்கு அவமதிப்பா? – கடும் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: தனது லண்டன் பேச்சு தொடர்பாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஆளுங்கட்சின் கோரிக்கைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கூச்சல் எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட கூட்டம் கடந்த மாதம் 10-ம் தேதி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் இன்று காலை தொடங்கியது. மக்களவை நடவடிக்கைகள் … Read more

'நன்றி சிஎம் சார்'.. ஒரே ட்வீட்.. சீமான் மீது வழக்கு.. பிரஷாந்த் கிஷோர் பெருமிதம்..!

வட மாநில தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியதாக சீமான் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் பிரஷாந்த் கிஷோர் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் பேசும்போது, என் ஆட்சியில் இந்தி காரர்களை அடித்து ஒரே வாரத்தில் மூட்டை கட்டிக்கொண்டு தமிழகத்தை விட்டு வெளியேற்றுவோம் என பேசியதாக அவர் மீது குற்றசாட்டு எழுந்தது. சீமானின் இந்த … Read more

கர்நாடக தேர்தல் 2023: எடியூரப்பா டபுள் டார்கெட்… மோடி கொடுத்த அசைன்மென்ட்!

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 224 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் மே 24ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 என வெற்றி பெற்றன. ஆனால் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் கிடைக்காததால் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. பாஜக பிளான் இதுபோன்ற சூழலை 2023 சட்டமன்ற தேர்தலில் தவிர்க்க பாஜக … Read more

AK62: யாருடா நீங்கலாம் ? விக்னேஷ் சிவனிடம் கைவரிசையை காட்டிய நபர்கள்..கடுப்பில் விக்கி போட்ட பதிவு..!

​விக்னேஷ் சிவன் வாய்ப்பு காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய விக்னேஷ் சிவனுக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. லைக்காவின் தயாரிப்பில் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதப்பட்டது. இதைத்தொடர்ந்து AK62 படத்திற்கான கதையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார் விக்னேஷ் சிவன். எட்டு மாதங்களுக்கு பிறகு அஜித்திடமும் தயாரிப்பு நிறுவனத்திடமும் தன் கதையை … Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் சிக்கி தவித்து வந்தது.  இந்த கொரோனா வைரசுக்கு பல உயிர்கள் பலியாகியுள்ளது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டனர்.  ஒவ்வொரு நாடுகளிலும் தின்தோறும் ஆயிரக்கணக்கான, நூற்றுக்கணக்கான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.  மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் அளவிற்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.  கொரோனா பரவலால் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் மூடப்பட்டது, கோவில்கள் மூடப்பட்டது, திரையரங்குகள், வணிக வளாகங்கள், சந்தை … Read more

7 ஆஸ்கர் வென்ற படத்திலிருந்து விலகிய ஜாக்கி சான்! ஏன் தெரியுமா?

7 ஆஸ்கர் விருதுகளை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் சிறப்பம்சங்கள் என்ன? இது எந்த மாதிரியான படம்? போன்ற பல விஷயங்களை பார்க்கலாம்.  7 ஆஸ்கர் விருதுகள்  95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில்  நடைபெற்றது. இதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த … Read more

ப்ளு காய்ச்சல் தடுப்பூசிக்கு தற்போது அவசியம் இல்லை – அமைச்சர் மா சுப்பிரமணியன்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சூரியகுமார் என்ற பத்து வயது சிறுவன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னுடைய வீட்டில் சானிட்டரி பாட்டில் கையில் வைத்திருந்தபோது தவறி நெருப்பில் விழுந்ததில் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர் உயிருக்கு போராடி வந்த நிலையில் தன் மகனை கருணை கொலை செய்திட வேண்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுவனின் தாயார் மனு அளித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்காணிப்பில் அந்த சிறுவன் சென்னை … Read more

நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்த ஆஸ்கர் இந்திய சினிமாவின் வெற்றி – நடிகர் ராம் சரண்

“ரஷ்யாவுடன் போர் தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் உக்ரைனின் கீவ் அரண்மனையில் நாட்டு நாட்டு பாடலை படமாக்கினோம்” என்று நடிகர் ராம் சரண் கூறியுள்ளார். ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற நிலையில் அதுகுறித்து நடிகர் ராம் சரண் அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நாங்கள் படமாக்கியதிலேயே “நாட்டு நாட்டு” பாடல்தான் மிகவும் கஷ்டமாக இருந்தது. என்றும், அந்த பாடலுக்கு கிடைத்த ஆஸ்கர் … Read more

பிரான்ஸ் வேலைநிறுத்தத்தால் பாரீஸ் நகர தெருக்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை

பிரான்ஸ் முன்வைத்துள்ள ஓய்வூதிய மறுசீரமைப்பு திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஏராளமான பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரீஸ் தெருக்களில் மலைபோல் குவிந்துள்ள குப்பை  துப்புறவுப் பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதைத் தொடர்ந்து, பாரீஸ் தெருக்களில் டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளன. குப்பைகளை எரிக்கும் மூன்று மையங்கள் வேலைநிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, தெருவோரங்களில் ஏராளம் பிளாஸ்டிக் பைகளையும் நிரம்பி வழியும் குப்பைத்தொட்டிகளையும் காணமுடிகிறது. விடயம் என்னவென்றால், இப்படி தெருக்களில் குப்பை குவிந்தும், எலிகள் நடமாட்டம் காணப்பட்டும், மக்களில் … Read more

சேப்பாக்கம் மைதான புதிய கேலரியை 17ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் புனரமைக்கப்பட்டுள்ள   புதிய கேலரிகள் திறப்பு விழா வரும்  17ந்தேதி நடைபெற உள்ளதாகவும்,  முதல்வர் மு.க.ஸ்டாலின்  புதிய கேலரியை திறந்து வைப்பார் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவரான அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி  தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் வகையில்,  நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 17ம் தேதி திறந்து வைக்க இருப்பதாக, இன்று  அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு … Read more