நெல்லையப்பர் கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பின் சந்தனாதி தைலம் தயாரிப்பு: சுவாமிக்கு சார்த்தி சிறப்பு வழிபாடு

நெல்லை: டவுன் நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பின் சந்தனாதி தைலம் தயார் செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் சுவாமிக்கு சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்பொரு காலத்தில் நெல்லையில் மூங்கில் காடு வழியாக அரண்மனைக்குப் பால் கொண்டு சென்ற ராமகோன் என்பவர் கல் தடுக்கி விழுந்ததால் மன்னருக்குக் கொண்டு சென்ற பால் முழுமையாகக் கொட்டிவிட்டது. அடுத்தடுத்து பல நாள்களில் இது போல நிகழ்ந்ததால் அரண்மனைக் காவலர்களுடன் அந்த இடத்துக்குச் சென்ற மன்னன் … Read more

முறையான அனுமதியுடனே திறப்பு: ஐகோர்ட் கிளையில் சரவணா ஸ்டோர்ஸ் பதில்

மதுரை: கட்டிடம் முழுவதுமாக கட்டப்பட்டு, முறையான அனுமதி பெற்ற பின்னரே திறக்கப்பட்டது என ஐகோர்ட் கிளையில் மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் பதில் அளித்துள்ளது. மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் கட்டுமான பணி, பாதுகாப்பு வசதி நிறைவடையும் வரை இடைக்கால தடை விதிக்கக் கோரிய வழக்கில் பதில் மனு அளித்துள்ளது. அவசர காலத்தில் பயன்படுத்தக் கூடிய அனைத்து விதமான ஏற்பாடுகளும் கட்டிடத்தில் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி … Read more

ஆளுநரின் செயல் சரியல்ல: டி.ஆர்.பாலு கண்டனம்

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை 4 மாதம் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ஆளுநரின் செயலை ஒன்றிய அரசு கண்டும் காணாதது போல் இருப்பதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

"அதிகாரிகளுக்கு தெரிந்தேதான் கோவையில் கனிம வள கொள்ளை நடக்கிறது”- மக்கள் பரபரப்பு புகார்

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய விவசாய நிலங்களில் அனுமதித்த அளவைவிட அதிக அளவில் கனிமவளங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு வனவிலங்குகளும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. உலகின் பல்லுயிர் சூழல் நிறைந்த எட்டு பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை முக்கியமாக பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நிலையில் வனத்தை ஒட்டிய பகுதிகளிலும், வனத்தை ஒட்டி இருக்கக்கூடிய விவசாய நிலங்களிலும் செம்மண், பாறைகள் ஆகியவை அதிக அளவில் எடுக்கப்பட்டு … Read more

ஆஸ்கர் விருது : 'ஆர்ஆர்ஆர்'-ஐ, பாலிவுட் படம் என்பதா? – தெலுங்கு ரசிகர்கள் கோபம்

95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்க நேரப்படி மார்ச் 12ம் தேதி ஞாயிறு இரவு(இந்தியாவில் இன்று காலை) நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விருதுகளில் இந்தியா சார்பில் இரண்டு விருதுகளை வென்றுள்ளார்கள். 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழில் தயாரான டாகுமென்டரி குறும்படத்திற்கு சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜனல் பாடல் விருதை 'ஆர்ஆர்ஆர்' தெலுங்குப் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் வென்றது. விழா நடக்கும் போது மேடையில் அந்தந்த விருதுகளைப் … Read more

போருக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புடினை சீன அதிபர் சந்திக்க திட்டம்| Chinese President Plans to Meet Russian President Putin Amid War

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்ய பயணம் மேற்கொண்டு, அதிபர் புடினை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன்- ரஷ்யா இடையே, கடந்த ஆண்டு பிப்.,24ல் போர் துவங்கியது. கடந்த ஒராண்டாக நடந்து வரும் இப்போரில் ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் பல நாடுகளின் உதவியோடு எதிர்கொண்டு வருகிறது. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது … Read more

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பாதி பிப்ரவரி 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில். கூட்டத்தொடரின் இரண்டாவது பாதி திட்டமிட்டபடி இன்று தொடங்கியது. தொடங்கிய உடனே, ஆளும் கட்சி உறுப்பினர்கள், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் குறித்து எழுப்பினர். அதனைதொடர்ந்து அதானி விவகாரம் … Read more

புரோ ஆக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவை அடக்கி இந்திய அணி 'திரில்' வெற்றி

ரூர்கேலா, 9 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியஅணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதல் இறுதி வரை திரில்லிங்காக நகர்ந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ‘ஹாட்ரிக்’ கோல் (13, 14, 55-வது நிமிடம்) அடித்தார். ஜக்ராஜ் சிங் … Read more

இத்தாலியில் நடுக்கடலில் தவித்த 1,000 அகதிகள் பத்திரமாக மீட்பு

ரோம், துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் சட்ட விரோத பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர். கடல் மார்க்கமாக ஆபத்தான முறைகளில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது. அந்த வகையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இத்தாலியின் கலபிரியா பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 2 குழந்தைகள் உள்பட 76 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இத்தாலி … Read more