ராமநாதபுரம் : அம்மையை கூட பொருட்படுத்தாமல் வேப்பிலையுடன் தேர்வு எழுத வந்த மாணவர்.!

தமிழகத்தில் அரசு உத்தரவின் படி, இன்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்காக அனைத்து மாணவர்களும் அதிக ஆர்வத்துடன் தயாராகி வந்துள்ளனர். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவருக்கு திடீரென கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அம்மை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவன் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே இருந்து பொதுத்தேர்விற்குத் தயாராகி வந்துள்ளார். அதன் படி, அந்த மாணவர் இன்று … Read more

கர்நாடகா: Vote From Home திட்டம்; மாற்றுத்திறனாளிகள், முதியோருக்காக அறிவிப்பு – கட்சிகள் எதிர்ப்பு

கர்நாடகா மாநிலத்தில், விரைவில் தேர்தல் நடக்கவுள்ளதால், பா.ஜ.க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படுமென அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படியான நிலையில், கடந்த மூன்று நாட்களாக, மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கர்நாடகத்தில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள், கள நிலவரத்தை ஆய்வு செய்ய, சுற்றுப்பயணம் வந்துள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையிலான அதிகாரிகள், … Read more

ஜவுளி கடையில் கார் திருடிய 2 பேர்.. சிசிடிவி உதவியால் காரை திருடிச் சென்ற 2 பேரை கைது செய்த போலீசார்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஜவுளி கடையில் கார் திருடிய 2 பேர் சிசிடிவி உதவியால் ஒரு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். களியக்காவிளையைச் சேர்ந்த பென்சாம் என்பவர் நாகர்கோவிலில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் துணி எடுக்க காரில் சென்றுள்ளார். பின்னர் வெளியே வந்த கார் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்தி, அங்கிருந்த சிசிடிவி காட்சியின் உதவியால் காரை திருடிச் சென்ற 2 பேரை கைது செய்தனர். 2 … Read more

இன்ஃப்ளூயன்சா தொற்று பரவலை தடுக்க தொடர்ந்து காயச்சல் முகாம் நடத்தப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

சென்னை: தமிழகத்தில் இன்ஃப்ளூயன்சா தொற்று பரவலை தடுக்க தொடர்ந்து காயச்சல் முகாம் நடத்தப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னாக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் சூர்யகுமார் தீக்காயம் அடைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவை அமைச்சர் பாராட்டினார். … Read more

“இது இந்தியர்களை அவமதிக்கவில்லையா..?” – சீனா, தென் கொரியாவில் மோடி பேசியதை நினைவூட்டி கார்கே கேள்வி

புதுடெல்லி: சீனா, தென் கொரியாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையைக் குறிப்பிட்டு, பாரதிய ஜனதா கட்சியை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் நாடாளுமன்றத்தில் இன்று கூடியது. அப்போது இரு அவைகளிலும் ஆளும் பாஜக உறுப்பினர்கள், சமீபத்தில் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் தவறாக பேசிய ராகுல் காந்தி தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் … Read more

எடப்பாடியின் சீரியஸ் டார்கெட்… தெற்கில் தாறுமாறு ஸ்கெட்ச்… ர.ர.,க்களுக்கு அசைன்மென்ட்!

அரசியல் கட்சிகள் சமூக ரீதியில் வாக்கு வங்கி அரசியலை முன்னெடுக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இதனை தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை வைத்தே பெரும்பாலும் கணித்து விடலாம். இதற்கு அதிமுகவும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டு அரசியலில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கும் அதிமுகவை வீழ்த்தவும், கபளீகரம் செய்யவும் பல்வேறு உள்ளடி வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மக்களவை தேர்தல் இவற்றை சமாளித்து தனித்துவமிக்க தலைவராக உருவெடுக்க மும்முரம் காட்டி வருகிறார் . மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் உட்கட்சி பிரச்சினைகள் முதல் … Read more

Ram Charan, RRR: நடிகர் ராம் சரண், மனைவியின் சொத்து மதிப்பு ரூ. 2, 500 கோடி மட்டுமே!

Naatu Naatu Ram Charan: பிரபல தெலுங்கு நடிகரான ராம் சாரண், அவரின் மனைவி உபாசனாவின் சொத்து மதிப்பு குறித்து அறிந்த ரசிகர்கள் வியந்துவிட்டார்கள். ​ராம் சரண்​டோலிவுட் மெகாஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தந்தை வழியில் நடிகராகிவிட்டார். அவர் அப்பல்லோ மருத்துவமனையின் துணை நிறுவனரும், சேர்மனுமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் பேத்தியான உபாசனா கமினேனியை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். உபாசனா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். ​உபாசனா​ராம் சரணின் கெரியருக்கு உறுதுணையாக … Read more

புதுச்சேரி பட்ஜெட்: LPG மானியம் 300 ரூபாய்! பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

புதுச்சேரி: 2023-24ம் ஆண்டுக்கான யூனியன் பிரதேச பட்ஜெட்டை தாக்கல் செய்த புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களுக்கு ரூ.300 மாதாந்திர எல்பிஜி மானியத்தை அறிவித்து, இத்திட்டத்திற்கு ரூ.126 கோடி ஒதுக்கீடு செய்தார். அரசு நடவடிக்கைகள் மூலம் பல்வேறு துறைகளின் சாதனைகளை விவரித்த ரங்கசாமி, அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ஒரு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.126 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என அறிவித்தார். புதுச்சேரி முதல்வர் 11,600 கோடி வரியில்லா … Read more

Oscars 2023: ஆஸ்கார் வென்ற நாட்டு நாட்டுப் பாடலைப் பாடியவர் யார் தெரியுமா?

Oscars 2023: கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற  நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. அப்லாஸ் (டெல் இட் லைக் எ வுமன்), ஹோல்டு மை ஹேண்ட் (டாப் கன் மேவரிக்), லிஃப்ட் மீ அப் (பிளாக் பாந்தர் வகண்டா ஃபாரெவர்), மற்றும் திஸ் இஸ் எ லைஃப் (எவ்ரிதிங் எவ்ரிதிங் ஆல் அட் அட்) போன்ற பல பாடல்கள் போட்டியில் … Read more

எம்.எம்.அப்துல்லா Vs சவுக்கு சங்கர்..! ட்விட்டரில் நடந்த வார்த்தைப் போர்! முழு விவரம்!

புதுக்கோட்டையை சேர்ந்தவரான எம்.எம்.அப்துல்லா திமுகவில் NRI Wing செயலாளராகவும் உள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், திடீரென சவுக்கு சங்கருடன் தரை லோக்கலாக சண்டை போட்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.  பொதுவாக அரசியல் தலைவர்களை வம்பிழுக்கும் வகையில் ட்வீட் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சவுக்கு சங்கர், இவர் திமுகவினர் பற்றி தொடர்ந்து பல ட்வீட்டுகளை பதிவிடுவார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்குவார். அவருக்கு திமுகவினர் பதிலடி கொடுப்பார்கள்.  இந்தநிலையில், … Read more