15 வயது சிறுவனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கும்பல்.. கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு!

பெரம்பலூரில் 15 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகரைச் சேர்ந்த ரோஹித் என்ற மாணவன் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். நேற்று விடுமுறை என்பதால் அங்குள்ள அங்காயி கோவில் அருகே நின்று கொண்டிருந்த போது வந்த மர்ம கும்பல் ரோகித்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது. தகவல் அறிந்துவந்து போலீசார் ரோஹித்தின் உடலைக் கைப்பற்றி … Read more

புதுச்சேரி | 6 முதல் 12 வரை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச்-சில் முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். காலை 10.45 மணிக்கு பட்ஜெட் வாசிக்க தொடங்கி 11.10க்கு நிறைவு செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்: ”புதுச்சேரியி்ல் 2023-24ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடு ரூ. 11,600 கோடி என … Read more

பட்ஜெட் கூட்டத்தொடர் | புதிய வியூகத்தை வகுத்துள்ளோம்: மல்லிகார்ஜூன கார்கே

புதுடெல்லி: மாநிலங்களவையின் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று (மார்ச் 13) நாடாளுமன்றத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் 16 கட்சிகள் பங்கேற்றன. இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டத்தில் எதிர்கட்சிகள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் அலுவல் அறையில், எதிர்கட்சிகளின் கூட்டம் நடந்தது. இதற்கு மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை தாங்கினார். இதில், காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் … Read more

ஆஸ்கர் விருது வென்ற படைப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

உலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் இந்த விழா உலகளவில் கவனம் பெற்று வருகிறது. இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ (The Elephant Whisperers) என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில் பராமரிக்க்கப்படும் ரகு, பொம்மி என்ற குட்டி யானைகளையும் பாகன் பொம்மன், அவர் … Read more

Maaveeran: ரிலீசுக்கு முன்பே சம்பவம் செய்த 'மாவீரன்': கெத்து காட்டும் எஸ்கே.!

சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அவ்வப்போது படம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்து வருகிறது. இந்நிலையில் ‘மாவீரன்’ படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தனது கெரியரை துவங்கிய இவர் தற்போது … Read more

ஆஸ்கார் மேடையில் கண்ணீர் விட்ட தீபிகா படுகோனே! இதுதான் காரணம்!

கடந்த ஆண்டு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் தற்போது ஆஸ்கார் விருதினை வென்றிருப்பது இந்தியர்களை பெருமையடைய செய்திருக்கிறது.  ரிஹானாவின் லிஃப்ட் மீ அப் ஃப்ரம் பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர், டெல் இட் லைக் எ வுமன், ஹோல்ட் மை ஹேண்ட் ஃப்ரம் டாப் கன்: மேவரிக் மற்றும் திஸ் இஸ் லைஃப் ஃப்ரம் எவ்ரிவேரிக் ஆல் அட் ஆகியவற்றிலிருந்து … Read more

உக்ரைனின் பாக்முட்டில் கடும் மோதல்-இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரிப்பு

ரஷ்யா-உக்ரைன் மோதலால் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பாக்முட்டில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக கடும் மோதல் நடைபெற்றுவரும் பாக்முட்டில் உள்ள உக்ரைன் வீரர்கள் இன்று கடும் தாக்குதலை எதிர்கொண்டனர். டொனெட்ஸ்க் பகுதியில் 24 மணி நேரத்தில் 220-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளநிலையில், பாக்முட் நகரில் நடைபெற்றுவரும் மோதலில் கடந்த 6-ம் தேதியில் இருந்து ஒருவாரத்தில் மட்டும் 1100-க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் … Read more

சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றிலிருந்து கேட்ட பெண்ணின் அலறல்… தீப்பிடித்த வீடு; விசாரணையில் ஏற்பட்டுள்ள சந்தேகம்

சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில், அந்த வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பமே பலியாகியுள்ளது. வெளியான புதிய தகவல்கள் மேற்கு சுவிட்சர்லாந்திலுள்ள Yverdon-les-Bains என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்று திடீரென தீப்பிடித்ததில் அந்த வீட்டில் வாழ்ந்த 45 வயது ஆண் ஒருவர், 40 வயது பெண் மற்றும் 13, 9 மற்றும் 5 வயதுடைய குழந்தைகள் மூவர் என மொத்தக் குடும்பமும் தீயில் எரிந்து பலியானதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது அந்த குடும்பத்தின் தலைவர், … Read more

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? உயர் நீதிமன்றம் கேள்வி…

 சென்னை:  அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவிட்டதா?  என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செய லாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், பல ஒபிஎஸ் உள்பட பலரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்,  அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக பொதுக் குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் … Read more

கிராமங்களில் உலா வரும் காட்டுப்பன்றிகளை விரட்டுவது எப்படி?விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் விளக்கம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, கிராமங்களில் உலா வரும் காட்டுப்பன்றிகளை விரட்டுவது எப்படி? என விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் விளக்கம் அளித்தனர். கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிலும், நான்காம் ஆண்டு இளங்கலை மாணவிகள், ஆழியார் அருகே தங்கி விவசாயிகளுக்கு பல்வேறு விவசாயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம், நெல்லித்துறை மன்னம் கிராமத்தில் கிராம சுயம திப்பீடு நடத்தினர். அப்போது, விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக இருக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்தும் … Read more