அமமுகவை பதம் பார்க்கும் எடப்பாடி: அடுத்தடுத்து விழும் விக்கெட்கள்!

அதிமுகவில் பொதுக்குழு தொடர்பான வழக்கு தீர்ப்பு வெளியான நிலையில் இடைக்கால பொதுச் செயலாளராக தொடர்வதற்கு எந்த தடையும் இல்லை என்ற நிலை உருவானது. எடப்பாடி பழனிசாமி தலைமையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திய நிலையில் மாற்றுக் கட்சியினர் பலரும் அதிமுகவை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பாஜகவிலிருந்து ஐடி விங்க் முக்கிய நிர்வாகிகளான சிகேடி நிர்மல் குமார், திலீப் கண்ணன் உள்ளிட்டவர்கள் பிற அணிகளைச் சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில் சிவகங்கையில் சனிக்கிழமை அதிமுக … Read more

The Elephant Whisperers: நம்ம முதுமலை தம்பதி பொம்மன், பெள்ளி, ரகு கதைக்கு தான் ஆஸ்கர் கிடைச்சிருக்குனு தெரியுமா?

95வது ஆஸ்கர் விருது விழா இந்தியர்களுக்கு மிகவும் ஸ்பெஷலானது ஆகும். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர்.ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. Naatu Naatu Oscars: ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்: இந்திய வரலாற்றில் புது சாதனை மேலும் கார்த்திகி கொன்சால்வஸ் இயக்கத்தில், குனீத் மோங்கா தயாரிப்பில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான The Elephant whisperers ஆவண படத்திற்கு … Read more

இதுவரை ஆஸ்கார் விருதுகளை வென்ற இந்தியர்கள் யார் யார் தெரியுமா?

Oscar Awards: பல்வேறு துறைகளைச் சேர்ந்த திரைப்படத் துறையில் உள்ள கலைஞர்களின் கலை மற்றும் தொழில்நுட்பத் தகுதியை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படும் மதிப்புமிக்க விருது தான் இந்த ஆஸ்கார் விருது.  இது அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வழங்கும் வருடாந்திர விருது ஆகும்.  ஆஸ்கார் விருதுகள் 1927ம் ஆண்டு தொடங்கப்பட்டது, இருப்பினும் ஆஸ்கார் விருது எனப்படும் இந்த தங்க முலாம் பூசப்பட்ட சிலையை வழங்கும் போக்கு 1929ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் … Read more

மகன், மகள்கள் சொத்தை அபகரித்து விட்டனர்… பேத்தியுடன் வந்து முதியவர் மனு!

கோவை மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். (வயது 80) இவரது மனைவி பட்சியம்மாள். இவர்களுக்கு ஆனந்தகுமார் என்ற மகனும், பார்வதி, பாக்கியலட்சுமி என்ற மகள்களும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகிய நிலையில், ஆனந்தகுமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நடராஜன் தனியார் மில்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தனது பணி ஓய்வுக்குப் பிறகு செக்யூரிட்டியாக பணிபுரிந்த நடராஜன் வயோதிகம் காரணமாக தற்போது வேலைக்குச் செல்வதில்லை. தனது வருமானத்தில் நடராஜன் மணியகாரம்பாளையம் பகுதியில் 7 சென்ட் இடத்தில் வீடு … Read more

மீண்டும் கடுமையான நடைமுறைக்கு தயாராகும் சீன நகரம்: கொந்தளிக்கும் மக்கள்

சீனாவில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரம் ஒன்று மீண்டும் கடுமையான நடைமுறைக்கு உள்ளாகக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவசர நடவடிக்கை சீனாவின் Xi’an நகர அதிகாரிகள் அவசர நடவடிக்கையின் ஒருபகுதியாக பாடசாலைகள், வணிகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக புழங்கும் பகுதிகளை ஊரடங்கு நடவடிக்கையில் கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனர். @getty Xi’an நகரில் திடீரென்று காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளதே முதன்மை காரணமாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, … Read more

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதுபோல முதலமைச்சர்  தலைமையில் தலைமைச் செயலகத்தில், “ஆட்சியும், வளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கான பசுமை அச்சு” ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மார்ச் 20ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில். சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. பல்வேறு துறை சார்ந்த 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் … Read more

திருப்புத்தூர் அருகே துவார்-பூலாம்பட்டி பகுதியில் காட்டெருமைகள் அட்டகாசம் அதிகரிப்பு-அச்சத்தில் விவசாயிகள்

திருப்புத்தூர் : சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே துவார் – பூலாம்பட்டி பகுதியில் காட்டெருமைகள் அட்டகாசம் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.திருப்புத்தூர் அருகே துவார் கிராமத்தில் இருந்து பூலாம்பட்டி செல்லும் சாலை வனப்பகுதிகளில் மற்றும் வள்ளிகண்மாய் பகுதிகளில் ஐந்து காட்டெருமைகள் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பாசன பகுதிகளில் பயிரிடப்பட்ட பயிர்களையும் பற்றும் நார்த்தங்காலையும் மேய்ந்து ஏக்கர் கணக்கில் சேதப்படுத்தி வருகிறது. இதனால் அச்சமடைந்த அப்பகுதியினர் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இப்பகுதிகளில் ஆய்வு செய்து இப்பகுதிகளில் சுற்றி தெரியும் காட்டெருமைகளை கிராமங்களில் … Read more

சுருக்குமடிவலை விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சுருக்குமடிவலை விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 53 மணி நேரம் வரை சுருக்குமடிவலையை உபயோகிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக மீனவர்களின் இடையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது: மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் பெற்ற கடன் விவரங்களை வெளியிட முடியாது என மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  மக்களவையில் உறுப்பினர் தீபக் பாய்ஜ், அதானி குழும விவகாரம் குறித்தும், அதானி நிறுவனம் எல்.ஐ.சி.யிடம் அதானி குழுமம் ரூ.6347 கோடி கடன் பெற்றுள்ளது குறித்தும் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், ஆர்பிஐ சட்ட … Read more

“ஜனநாயகத்தை காப்பது யார் ?” ராகுல் பேச்சால் ஆத்திரமுற்ற மத்திய அரசு| Rahul Gandhi, In Shameless Manner…”: Government Slams London Remarks

புதுடில்லி: வெளிநாட்டில் இந்தியாவை அவமதித்து பேசுவது கண்டிக்கத்தக்கது என காங்., எம்பி., ராகுலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது . இன்றைய பார்லி., கூட்டம் துவங்கியதும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில்: வெளிநாட்டில் இந்தியாவை அவமதிப்பதா ? மத்திய அரசு கண்டனம் ராகுல் சமீபத்திய லண்டன் கூட்டத்தில் இந்தியாவில் ஜனநாயகம் பறிபோய் விட்டதாக கூறியுள்ளார். இது நாட்டை அவமதிப்பதற்கு சமம். இது வெட்கப்பட வேண்டிய செயல். ராகுல் இந்த அவையின் உறுப்பினர் கூட , … Read more