'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' – ஆஸ்கர் விருதை வென்ற 'யானைப் பெண்கள்'

உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள்தான் பெருமைக்குரிய ஒரு விருதாகக் காலம் காலமாகக் கருதப்படுகிறது. 95வது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் 'சிறந்த ஒரிஜனல் பாடல், சிறந்த சர்வதேசத் திரைப்பட விருது, சிறந்த டாகுமென்டரி திரைப்பட விருது, சிறந்த டாகுமென்டரி குறும்பட விருது' ஆகிய பிரிவுகளில் படங்கள் போட்டியிட்டன. இவற்றில் 'சிறந்த ஒரிஜனல் பாடல்' விருதில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் விருதை வென்றுள்ளது. அடுத்து … Read more

தில்லி – தோஹா இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் மரணம்!

டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், கராச்சியில் உள்ள ஜின்னா டெர்மினல் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.  இண்டிகோவின் 6E-1736 விமானம் டெல்லியில் இருந்து தோஹாவுக்குப் பறந்து கொண்டிருந்த போது, மருத்துவ அவசரநிலை காரணமாக, பாகிஸ்தானின் கராச்சி நோக்கி திருப்பி விடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, இண்டிகோவின் 6E-1736 விமானம் மருத்துவ அவசரநிலை காரணமாக திருப்பி விடப்பட்டுள்ளது. இருப்பினும், கராச்சியில் தரையிறங்கிய பின்னர், … Read more

பிளஸ்-2 தேர்வு தொடக்கம்: திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுக்கு வாழ்த்து

பிளஸ்-2 தேர்வு தொடக்கம்: திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுக்கு வாழ்த்து Source link

#BigBreaking | அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிகள்? ஓபிஎஸ்-க்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது/ கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து வழக்கில், பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதால், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தற்போது எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார்.  இதற்கிடையே … Read more

எடப்பாடி பழனிசாமி மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு..!!

சிவகங்கையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் சென்றார். அப்போது ராஜேஷ்வரன் என்ற வாலிபர் அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மதுரை விமான நிலையத்தில் இருந்து பயணிகளை பேருந்தில் வெளியில் அழைத்து வந்த போது எடப்பாடி பழனிசாமியுடன் பயணம் செய்தனர். இந்த நிலையில்தான் சிங்கம் புணரியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து அவருக்கு எதிராக பேருந்துக்குள் வைத்தே … Read more

டெல்லி டு தோஹா: அவசரமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட விமானம்; பயணி உயிரிழப்பு – என்ன நடந்தது?

இண்டிகோ ஏர்லைன் விமானம் 6E-1736 டெல்லியிலிருந்து தோஹா (கத்தார்) புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருக்கும் போது நைஜீரியராவைச் சேர்ந்த பயணி ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு இண்டிகோ விமானத்தின் பைலட் கராச்சி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைத் தொடர்புகொண்டு, மருத்துவ அவசரநிலை காரணமாக , விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி கோரினார். உடனடியாக விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, டெல்லி -தோஹா பயணிகள் விமானம் அவசரமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் … Read more

15 வயது சிறுவன் சரமாரியாக வெட்டிக் கொலை கும்பல்.. கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

பெரம்பலூரில் 15 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகரைச் சேர்ந்த ரோஹித் என்ற மாணவன் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். நேற்று விடுமுறை என்பதால் அங்குள்ள அங்காயி கோவில் அருகே நின்று கொண்டிருந்த போது வந்த மர்ம கும்பல் ரோகித்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது. தகவல் அறிந்துவந்து போலீசார் ரோஹித்தின் உடலைக் கைப்பற்றி … Read more

அதிமுகவில் இணைந்தார் அமமுக இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர்

சென்னை: அமமுக இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சினை தொடர்ந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பலர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (மார்ச்12) அமமுக தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.கே உமாதேவன் மற்றும் அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி … Read more

பட்ஜெட் கூட்டத்தொடர் | எதிர்க்கட்சிகளின் அமளியால் இருஅவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: எதிர்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் இன்று(திங்கள்கிழமை) கூடியது. மக்களவையில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது லண்டன் பேச்சுக்காக ராகுல் காந்தி நாடாளுன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகரின் இருக்கை அருகே வந்து அமளியில் ஈடுபட்டனர். அதேபோல, மாநிலங்களவையிலும் ராகுல் காந்தியின் … Read more

H3N2 வைரஸ் இன்புளுயன்சா தொற்றால் திருச்சியில் இளைஞர் பலி – தமிழகத்தில் முதல் உயிரிழப்பு..!

கொரோனா, ஒமைக்ரான்-ஐ தொடர்ந்து தற்போது H3N2 என்ற ‘இன்புளுயன்சா’ வைரஸ் இந்தியாவில் உருவெடுத்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் ஹரியானா மற்றும் கர்நாடகாவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் இளைஞர் ஒருவர் இன்புளுயன்சா காய்ச்சலால் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மலைக்கோட்டையை சேர்ந்த சேர்ந்த இளைஞர் பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு நண்பர்களுடன் கோவாவுக்கு சென்ற இளைஞர் சொந்த ஊரான மலைக்கோட்டைக்கு … Read more