அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது: மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

டெல்லி: அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். ஆர்பிஐ சட்டத்தின்படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது என்றும் அதானி கடன் விவகாரம் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

கொரோனாவுக்கு பலியான திருச்சி இளைஞர்! நடந்தது என்ன? – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

கோவிட் தொற்றுடன் உயிரிழந்த இளைஞருக்கு வேறு இணைநோய்கள் இருந்ததா என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவருக்கு இணைநோய்கள் இருப்பதாகத்தான் தெரிகிறது என தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜுலை மாதம் 7 ஆம் தேதி கோவிட் தொற்றால் இணைநோய்களுடன் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் கோவிட் தொற்றிற்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? … Read more

ஆஸ்கரில் இந்தியா! RRR-க்கு முன்பும் பின்பும்.. இதுதான் இந்த விருதுகளை ஸ்பெஷலாக மாற்றியது!

95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலெஸில் நடைபெற்றிருக்கிறது. உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக நேரடி இந்திய திரைப்படமான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஆஸ்கர் விருதை பெற்று இந்திய திரைத்துறைக்கு மிகப்பெரிய பெருமையை கொடுத்திருக்கிறது. ஆஸ்காரை அலங்கரிந்த ஏ.ஆர்.ரஹ்மான்! 1929ம் ஆண்டு தொடங்கிய இந்த ஆஸ்கர் விருது விழா தற்போது 95வது ஆண்டை எட்டியிருக்கிறது. இத்தனை ஆண்டு காலத்தில் முதல் முறையாக ஒரு நேரடி இந்திய படத்துக்கான அங்கீகாரம் RRR படத்துக்கு கிடைத்தது எந்த அளவுக்கு பெருமையோ … Read more

7 ஆஸ்கர் விருதுகளை குவித்த ‛எவரிதிங்க் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்'

லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவின் நாட்டு நாட்டு பாடல், ஆவண குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பர்ஸ்' ஆகியவை ஆஸ்கர் விருது வென்றன. ஹாலிவுட் படமான ‛எவரிதிங்க் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தி உள்ளது. உலகளவில் சினிமாவில் மிக உயர்ந்த விருதாக கவுரவிக்கப்படுவது ஆஸ்கர். 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டால்பி தியேட்டரில் இன்று(மார்ச் 13, இந்திய நாள்) நடைபெற்றது. இதில் … Read more

கடற்கரையைப் தூய்மைப்படுத்தும் திட்டம் மட்டக்குளி, காக்கா தீவு கடற்கரையிலிருந்து ஆரம்பம்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீயினால் இலங்கையின் கரையோரத்தில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டம், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (12) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. கடற்கரையோரத்தில் உள்ள குப்பைகளை இயந்திரம் மூலம் அகற்றும் இந்தத் திட்டம் கொழும்பு மட்டக்குளி, காக்கா தீவு கடற்கரையில் ஆரம்பிக்கப்பட்டது. கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மத்திய சுற்றாடல் … Read more

இந்தியாவின் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது…!

அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவருகிறது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இந்தியா சார்பிலும் பலர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்தியா சார்பில் குறும்பட பிரிவில் கலந்து கொண்ட தி எலிபெண்ட விஸ்பர்ஸ் படம் சிறந்த ஆவண குறும்படம் என தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. தாயை பிரிந்து தவித்த 2 குட்டி யானைகளை பராமரிக்கும் நீலகிரியின் முதுமலையை சேர்ந்த பொம்மன், பொம்மி தம்பதி குறித்த ஆவண … Read more

இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல ..!!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வகையில் ஒவ்வொன்று மீதும் தனி ஈர்ப்பு இருக்கும். அது போல பெண்கள் என்றாலே நினைவுக்கு வருவது ஆபரண தங்க நகைகள் தான். அதுவும் குறிப்பாக வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சுப காரியங்களுக்கும் பெண்கள் ஆசையாக தங்க நகைகளை அணிந்து கொள்வது என்பது நமது தமிழ்நாட்டு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தாறுமாறாக … Read more

டெல்லி: தெரு நாய் தாக்கி சகோதரர்கள் பலியான சோகம் – 5, 7 வயதுடைய குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்!

டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதி சிந்தி பஸ்தியில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் பெற்றோருடன் ஆனந்த் (7), ஆதித்யா (5) ஆகிய இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்ற சிறுவன் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு போலீஸ் குழுவும், சிறுவனின் குடும்பத்தினரும் அவரைத் தேடத் தொடங்கினர். அவர்கள் வசித்து வந்த குடிசைப் பகுதிக்கு அருகிலுள்ள காட்டில் இரண்டு மணி … Read more

தமிழ்நாடு மீனவர்கள் 16 பேர் கைது; படகுகள் பறிமுதல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்படுவதும் கைது செய்து, அங்கு சிறையில் அடைக்கப்படுவதும் கடும் கண்டனத்திற்குரியதாகும். மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு, வாழ்ந்து வரும் மீனவர்கள் உயிர், உடைமை உட்பட தொழில் பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. நாகை மாவட்டம் … Read more