சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம்… பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 .. புதுவை பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செயதுள்ளார் .முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய சில அறிவிப்புகள் பின்வருமாறு, *புதுச்சேரியில் 11, 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். *தமிழ்வளர்ச்சி,ஆராய்ச்சியை மேம்படுத்த புதுச்சேரியில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும். *பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 ஆண்டுகளுக்கு … Read more

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள்: ஆராய இந்திய தூதுக்குழு

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கு இந்திய தூதுக்குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளது. தங்க நகை ஆபரண சம்மேளனத்தின் தலைவர் சுலானி தலைமையிலான தூதுக்குழுவினரே எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இக்குழுவினர் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து முதலீட்டு வாய்ப்புகள் குறித்து; ஆராயுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்துப் பொருட்கள், மின் உபரகணங்கள், மோட்டார் வாகனம், மற்றும் உணவு பதப்படுத்தல் உட்பட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளக் கூடிய முதலீடுகள் … Read more

கல்விக்கடன் தள்ளுபடி, மாநில கல்விக் கொள்கை! அசத்தலான அறிவிப்புகளுடன் வெளியானது பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் பட்ஜெட்! 

பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்துள்ள 2023-24 ஆம் ஆண்டிற்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை (13.03.2023) திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் வெளியிடப்பட்டது. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். 1. 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின்  வருவாய் வரவுகள் ரூ.4,98,876 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,92,396 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் … Read more

ஆஸ்கார் விருது பட்டியல் ஒரு பார்வை..!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், என்னென்ன படங்கள், எந்தெந்த பிரிவில் விருதை வாங்கியுள்ளது ஒரு பார்வை. சிறந்த அனிமேஷன் படம் : ஆஸ்கர் விருது விழாவில் முதலாவதாக சிறந்த அனிமேஷன் பட விருதை கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ படம் கைப்பற்றியது. சிறந்த துணை நடிகர் : எவ்ரிவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்ற படத்தில் நடித்ததற்காக கே ஹுய் குவான் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். சிறந்த … Read more

“அரசியல், பொருளாதாரத்தில் பெண்களின் பங்கை மேம்படுத்துவோம்" – பெண் கூட்டமைப்பு!

பெண் கல்வியில், வேலைவாய்ப்பில், அரசியலில் சமத்துவநிலை அடைய வேண்டும் என்பதற்காக எத்தனையோ இயக்கங்கள், போராட்டங்கள், பிரசாரங்கள் இச்சமூகத்தில் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. ஆனால் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகமுள்ளது. பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தின் ஓர் அங்கமாக, பெண் கூட்டமைப்பு (THE PEN COLLECTIVE)  என்ற திட்டம் 10.3.2023 அன்று, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்  கல்லூரியில் தொடங்கப்பட்டது. பெண் கூட்டமைப்பு துவக்க விழாவில் பெண்கள் விரும்பும் நகரங்களில் சென்னைக்கு முதலிடம்; மற்ற நகரங்களுக்கு எந்தெந்த … Read more

தனியாக இருக்கும் பெண்களை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக மூன்று பேர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வீடு புகுந்து தனியாக இருக்கும் பெண்களை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கோகுல் நகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 பேர் சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சதீஷ், மணிகண்டன், மஞ்சு ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், தனியாக இருக்கும் பெண்களை வீடு புகுந்து கட்டிப் போட்டு  கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்ததும், ஏற்கெனவே 2 இடங்களில் மூன்று பேரும் … Read more

கரோனா பாதிப்பு அதிகரிப்பு | மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்: மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்து மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோவில் குளத்தை ஆய்வு செய்த பின் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நாடு முழுவதுமே கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 40 ஆக அதிகரித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த 27 … Read more

ராகுலை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் – பாஜக எம்பி பிரக்யா தாக்குர் பேச்சு

புதுடெல்லி: இங்கிலாந்தின் லண்டன் நகரில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தியை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என பாஜக எம்பி பிரக்யா தாக்குர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் லண்டனில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு ஆளும் கட்சி மதிப்பளிப்பதில்லை என்று தெரிவித்திருந்தார். பாஜகவை விமர்சிக்கும் வகை யில் அவர் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார். தவிர நாட்டுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை … Read more

அண்ணா நகர் டவர் பூங்கா ரெடி: 12 வருஷம் ஆச்சு… சென்னை மக்கள் செம ஹேப்பி!

சென்னை மாநகராட்சியில் உள்ள அண்ணா நகர் டவர் பூங்கா மிகவும் புகழ்பெற்றது. இது 1960களில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. 100 அடி உயரத்துடன் அடுக்குமாடி குடியிருப்பு போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது. இங்கிருந்து பார்த்தால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பசுமையான பகுதிகளும், கட்டிடங்களும் அற்புதமாக காட்சியளிக்கும். 2011ஆம் ஆண்டு வரை அண்ணா நகர் டவர் பூங்காவை பொதுமக்கள் தினசரி பார்வையிட்டு வந்தனர். அண்ணா நகர் டவர் பூங்கா ஆனால் அதன்பிறகு பல்வேறு தற்கொலை நிகழ்வுகள் நடந்ததால் மூட வேண்டிய … Read more