RRR, Jimmy Kimmel:ஆர்.ஆர்.ஆர். பாலிவுட் படமா?: ஆஸ்கர் நிகழ்ச்சி தொகுப்பாளரை விளாசும் ரசிகர்கள்

95வது ஆஸ்கர் விருது விழாவில் எஸ். ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது கிடைத்திருக்கிறது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய பட பாடல் நாட்டு நாட்டு ஆகும். Naatu Naatu Oscars: ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்: இந்திய வரலாற்றில் புது சாதனை நாட்டு நாட்டு செய்துள்ள இந்த சரித்திர சாதனையால் தெலுங்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பெருமகிழ்ச்சியில் … Read more

iPhone 14 வாங்க இதுவே சரியான நேரம்! 66 ஆயிரத்திற்கு பிளிப்கார்ட் சலுகை!

பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் உலகின் சிறந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் ஆப்பிள் ஐபோன் மாடலின் புதிய iphone 14 இந்தியாவில் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் Big Saving Days Sale மார்ச் 15 வரை நடைபெறவுள்ளது. இந்த விற்பனையில் வாடிக்கையாளர்களை கவர ஐபோன் 14 ஸ்மார்ட்போனின் 128GB வேரியண்ட் 65,999 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மையான விலை 79,9000 ஆயிரம் ரூபாய் ஆகும். பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்க ஆசைப்படுபவர்களுக்கு இதுவே சரியான நேரம். ஐபோன் … Read more

12th Board Exams: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு! முதல் நாளான்று மொழித்தேர்வு

Board Exam 2023: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்கு 6 தேர்வு மையங்கள் உட்பட மொத்தம் 128 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தனித்தேர்வர்கள் உட்பட 360 பள்ளிகளை சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் என மொத்தம் 35,827 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு துவங்கும் இந்த … Read more

அமெரிக்கா-தென்கொரியா கூட்டு பயிற்சி இன்று தொடங்கும் நிலையில் ஏவுகணைகளை ஏவி பரிசோதித்த வடகொரியா..!

அமெரிக்கா-தென்கொரியா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடங்கும் நிலையில், வடகொரியா ஏவுகணைகளை ஏவி பரிசோதித்தது. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, வடகொரியா அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. கொரியாவின் கிழக்கு கடற்கரையில் ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்த இலக்கை தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்கா-தென் கொரியா படையினர் இன்று முதல் 11 நாட்களுக்கு கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்கின்றனர். சுதந்திரக் கேடயம் 23 என அழைக்கப்படும் இப்பயிற்சி 2017-ம் … Read more

கம்யூனிஸ்டுகளை கேரள மக்களும் நிராகரிக்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

கம்யூனிஸ்ட்டுகளை உலகம் நிராகரித்து விட்டது, அதுபோல கேரளாவும் நிராகரிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரசும் கேரள அரசியலில் எதிர் எதிராக இருந்த போதும் திரிபுராவில் கூட்டாக தேர்தலில் போட்டியிட்டதாக விமர்சனம் செய்தார். கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இருப்பதாகவும், அதேநேரத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் … Read more

கடலூர் அருகே நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த 8 பைபர் படகுகள் – பரபரப்பு

கடலூர்: கடலூர் ஆரகே கடற்கரையில்  பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்த 8 பைபர் படகுகள் தீப்பிடித்த எரிந்தது அந்தபகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. படகுகளில் மர்மநபர்கள் தீ வைத்து எரித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த  சம்பவம் கடலூர் அருகே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 படகுகள் மற்றும் வலைகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய … Read more

வேகமாக பரவும் இன்புளுயன்சா!: தமிழ்நாட்டில் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் திருச்சியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு..!!

திருச்சி: தமிழ்நாட்டில் இன்புளுயன்சா பாதிப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் உயிரிழந்த இளைஞர், இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிப்ரவரி மாத நிலவரப்படி 545  பேருக்கு இன்புளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக எச்3என்2 என்ற இன்புளுயன்சா வகை காய்ச்சல் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருவதாக ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்திருந்தது. இன்புளுயன்சா காய்ச்சலுக்கு நாடு முழுவதும் ஒரு சில உயிரிழப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், தமிழகத்தில் நேற்று … Read more

கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் என்எல்சிக்காக நிலம் சமன்படுத்தும் பணி நிறுத்தம்

கடலூர்: கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் என்எல்சிக்காக நிலம் சமன்படுத்தும் பணி நிறுத்தபட்டுள்ளது. ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சமன்படுத்தும் பணி 2 நாட்களுக்கு நிறுத்தியுள்ளனர். நிலம் கையகப்படுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் பணிகள் நிறுத்தபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

நீங்கள் வெறும் பிரதமர் மட்டுமே, கடவுள் இல்லை : பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா பதிலடி

டெல்லி : ஜனநாயகம் மீது பாஜக நடத்தும் தாக்குதல் காரணமாகவே அது குறித்து பேச வேண்டி இருப்பதாக ராகுல் காந்தி மீதான பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. கர்நாடகாவில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இந்திய ஜனநாயகம் குறித்து பேசி நாட்டு மக்களை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாகவும் பிரதமர் மோடி சாடினார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த … Read more

ஆஸ்கர் விருதினை தட்டித் தூக்கியது ’நாட்டு நாட்டு’ பாடல் – மகிழ்ச்சி வெள்ளத்தில் படக்குழு!

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. ஆஸ்கர் மேடையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பாடப்பட்டது. பாடலுக்கு கலைஞர்கள் நடனமாடினர். பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் நாட்டு நாட்டு பாடலை ஆஸ்கர் மேடையில் பாடினர். … Read more