கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் பரவி வரும் வைரஸ், 5 தொற்று நோய்களின் கலவை – ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!

கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் பரவி வரும் வைரஸ், 5 தொற்று நோய்களின் கலவை என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். லேசான முதல் அதி தீவிரமான உடல் நல பாதிப்புகளை இந்த வைரஸ் கலவை ஏற்படுத்தி வருகிறது. கோவிட் போல் அல்லாமல் மாறுபட்ட இருமல், சளி, காய்ச்சல் உடல் வலி போன்ற பாதிப்புகளை ஏராளமானோரிடம் கண்டுள்ள மருத்துவர்கள் அதற்கான சிகிச்சையளித்து வருகின்றனர்.பன்றிக் காய்ச்சல் போன்றவையும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. 2019 முதல் கோவிட், பன்றிக்காயச்சல், H3N2, … Read more

கிரகத்தின் மாற்றத்தால் இந்த வாரத்திற்கான பலன்! 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையப்போகுது?

கிரகங்கள் தினமும் மாறுப்படும். ஆகவே ஒவ்வொரு ராசிக்கும் பலன்கள் ஒவ்வொரு நாளும் பலன்கள் மாறுப்படும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான பலன்களும் மாறுப்பட்டு உள்ளன.  எனவே இந்த வாரத்திற்கான இராசிகளுக்கான பலனை பார்க்கலாம்.  மேலும் துலாம் முதல் கன்னி வரையுள்ள 6 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன் எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாம்.  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்  Source link

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி…

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்  மார்ச் 9ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று  (மார்ச் 13ந்தேதி) மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி, 12 ஆண்டுகளுக்கு பின் இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி சட்டசபையில் கடந்த 12 வருடங்களாக  முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.  பொதுவாக  மார்ச் மாதங்களில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த … Read more

புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு-கேரளா பகுதிகளை இணைக்கும் ரயில் தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் டிசம்பருக்குள் நிறைவு: ரயில்வே மேலாளர் பேட்டி

சென்னை: தமிழ்நாடு-கேரளா பகுதிகளை இணைக்கும் ரயில் தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் டிசம்பருக்குள் நிறைவு பெரும் என்று ரயில்வே மேலாளர் கூறியுள்ளார். தென்காசி ரயில்தடத்தில் முடிவுற்ற மின்மயமாக்கல் பணிகளை ஆய்வு செய்தபின் தெற்கு ரயில்வே மேலாளர் பேட்டி அளித்துள்ளார்.

'நாட்டு நாட்டு' பாடல், The Elephant Whisperersக்காக ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: ‘நாட்டு நாட்டு’ பாடல், The Elephant Whisperersக்காக ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டு நாட்டு பாடல் உலகளாவியது; இன்னும் பல ஆண்டுகள் நினைவில் நிற்கும் பாடலாக இருக்கும். ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி, சந்திரபோஸ் மற்றும் ஆர்.ஆர்.ஆர்.படக்குழுவினருக்கு வாழ்த்துகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

''அகதிகள் படகில் தொடங்கி ஆஸ்கரை தொட்ட பயணம்” – மேடையில் நடிகர் கீ ஹூங் குவான் நெகிழ்ச்சி!

சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்ற கீ ஹூ குவான், “அம்மா, நான் ஆஸ்காரை வென்றுவிட்டேன்” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் உலகளவில் திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளுக்கு ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இவ்விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதினை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்திற்காக நடிகர் கீ ஹுங் குவான் தட்டிச்சென்றார். இவ்விருதை … Read more

ஆஸ்கர் விருது வென்ற 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், சந்திரபோஸ் எழுதி, ராகுல் சிப்லிகுன்ச், கால பைரவா பாடிய 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் 95வது ஆஸ்கர் விருதில் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருதை வென்று சாதனை படைத்துள்ளது. இந்தப் பாடல் வெளிவந்த சமயத்திலிருந்தே ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடலாக அமைந்தது. அப்பாடலுக்காக பிரேம் ரக்ஷித் நடன இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் ஆடிய அதிரடி நடனமும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. 1000 கோடிக்கும் … Read more

ஆஸி.,க்கு கிடைக்கிறது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் | Aussie gets nuclear powered submarine

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவும், சீனாவின் அத்துமீறல்களை முறியடிக்கவும், அணுசக்தியால் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்ய, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் இடையே, ‘ஆக்கஸ்’ என்ற பாதுகாப்பு ஒப்பந்தம் 2021ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்த நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன. இந்த வகையில், அமெரிக்கா தயாரிக்கும் அணுசக்தி … Read more