குருப்-2 முதன்மைத் தேர்வு குளறுபடி விவகாரம்: மறுதேர்வு நடத்தக் கோரி போராட்டம்

சென்னை: தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 முதன்மைத் தேர்வு கடந்த பிப். 25-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாகவும், மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் தேர்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு அனைத்து நிலை போட்டித் தேர்வுகளின் கூட்டமைப்பு சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வர்கள், பயிற்சியாளர்கள் என100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற … Read more

கட்டமைப்பு வசதி வழங்க கவனம் செலுத்துகிறேன்: பெங்களூரு – மைசூரு விரைவு சாலை தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு

பெங்களூரு: ‘‘நாட்டு மக்களுக்கு சிறந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் நான் கவனம் செலுத்துகிறேன்’’ என பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி தெரிவித்தார். கர்நாடகாவில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த ஜனவரியில் இருந்து 6-வது முறையாக நேற்று கர்நாடகாவுக்கு வந்தார். காலை 11.30 மணியளவில் மைசூரு விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டியாவுக்கு சென்றார். அங்குள்ள … Read more

Leo: சஞ்சய் தத்தை தொடர்ந்து லியோ படத்தில் இணைந்த மேலும் ஒரு பாலிவுட் பிரபலம்..இவர் லிஸ்ட்லயே இல்லையே..!

​விஜய் ​லியோ விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்திய சினிமாவே எதிர்பார்த்திருக்கும் இப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரையில் வெளியாகவுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்கள், படத்தின் ப்ரோமோ வீடியோ என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது. இதற்கு ஏற்றாற்போல லியோ படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் தான் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. எனவே மாஸ்டர் படத்தின் மூலம் விஜய்க்காக சில கமர்ஷியல் … Read more

உக்ரைனின் வுஹ்லேடார் நகரின் மீது தெர்மைட் குண்டுகளை ரஷ்யா வீசியுள்ளதாக தகவல்!

உக்ரைனின் வுஹ்லேடார் நகரின் மீது தெர்மைட் குண்டுகளை ரஷ்யா வீசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனில் உள்ள பாக்முட் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் சுமார் ஆயிரத்து 100 பேர் பலியாகினர். இந்நிலையில் வுஹ்லேடார் நகரின் மீது ரஷ்யா தெர்மைட் குண்டுகளை வீசியது. அலுமினியம் மற்றும் இரும்பு ஆக்சைடு போன்ற உலோகங்களால் ஆன இந்த வகை குண்டுகள் மனித உடலில் பட்டதும் சதையை எரிக்கும் தன்மை கொண்டது. தெர்மைட் குண்டுகளை பொதுமக்கள் … Read more

7 தேசிய கட்சிகளின் 66 சதவீத வருமானம் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து திரட்டப்பட்டவை – ஆய்வறிக்கை!

7 தேசிய கட்சிகளின் 66 சதவீத வருமானம் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து திரட்டப்பட்டவை என்பது ஆய்வறிக்கை மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், பாரதிய ஜனதா, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், 2 இடதுசாரிக் கட்சிகள், தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு 2021-2022ம் ஆண்டில் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து 2,172 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாகவும், இது மொத்த வருமானத்தில் 66 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

2023பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது..

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து  கேள்வி எழுப்ப நாடாளுமன்ற எதிர்க்கட்சி யினர் திட்டமிட்டு உள்ளனர். பாராளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2023 குடியரசு தலைவர் உரையுடன்   ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக நடத்தப்படும் என பாராளுமன்ற விவகார குழு அறிவித்திரந்தது. அதன்படி, பட்ஜெட்  கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி முதல்  ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் என … Read more

தாயைப் பிரிந்த 2 யானை குட்டிகளுக்கு தாய், தந்தையாக மாறிய முதுமலை தம்பதி… ஆஸ்கர் விருதை வென்ற தமிழ் ஆவணப்படத்தின் குட்டி ஸ்டோரி!

நீலகிரி  : அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில், சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை இந்தியாவின் The elephant whisperers திரைப்படம் வென்றது. இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர்.வனத்தில் தாயைப் பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட 2 யானை குட்டிகளுக்கு தாய், தந்தையாக மாறி வளர்த்து ஆளாக்கிய ஊட்டி பழங்குடியின தம்பதியின் அனுபவத்தை, ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம்  கதைக்களமாக கொண்டுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில், ஆசியாவின் … Read more

ஆஸ்கர் விருதுகள் 2023: RRR திரைப்படத்தி இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருதுகள் 2023: RRR திரைப்படத்தி இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்த பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச விருதுகளை பெற்றது.

விமான கழிப்பறையில் புகை பிடித்தவர் போலீசிடம் ஒப்படைப்பு: ஏர் இந்தியா நடவடிக்கை

மும்பை: ஏர் இந்தியா விமானத்தில் கழிப்பறையில் புகை பிடித்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்ததாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம் ஏஐ130 மார்ச் 10ம் தேதி லண்டனிலிருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்தது. அதில் பயணித்த ஒரு நபர் கழிப்பறையில் புகை பிடித்துள்ளார். விமான ஊழியர்கள் பலமுறை எச்சரித்தும் அவர் தொடர்ந்து புகை பிடித்ததுடன், ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து விமானம் மும்பை வந்தவுடன், அந்த நபரை மும்பை … Read more