தமிழக அரசு மருத்துவமனையில் கொடூரம்! அழுகிய காலுடன் நோயாளியை தெருவில் வீசி சென்ற அராஜகம்!

மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளியை. சிகிச்சை அளிக்காமல் அழுகிய காலுடன் வீல்சேரில் அழைத்து வந்து, வெளியே தூக்கிப் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் பகுதிக்கு உட்பட்ட சாலை ஓரம், பிரகாஷ் என்ற கூலி தொழிலாளி காலில் புண்ணுடன் கிடந்துள்ளார். இதனை கண்ட சமூக ஆர்வலர்கள் சிலர், அவரை மீட்டு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சிகிச்சை … Read more

துப்பாக்கி முனையில் ரவுடிகளை பிடிக்கச்சென்ற போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடிகளுக்கு கை, கால் முறிவு!

காஞ்சிபுரத்தில் கத்தியை காட்டிய ரவுடியின் கூட்டாளிகளை நோக்கி போலீசார் துப்பாக்கியை எடுத்து காட்டியதால் பயந்து  மேம்பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றபோது கைல் கால் முறிந்து காயமடைந்தனர். பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் பிரபா மற்றும் மண்டேலா ஆகியோர் மீது காஞ்சிபுரத்தில் கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலைய மேம்பாலத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு … Read more

மருத்துவர் பணிக்கான தேர்வை உடனே நடத்த வேண்டும் – தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: அரசு மருத்துவர் பணிக்கான தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்(எம்ஆர்பி) கடந்த ஆண்டு அக்.11-ம்தேதி வெளியிட்டது. எம்பிபிஎஸ் முடித்த ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இதற்கான கணினி வழி எழுத்து தேர்வை, கடந்த நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களின் … Read more

ஏர் இந்தியா விமான கழிப்பறையில் புகைப்பிடித்த அமெரிக்கர் மீது வழக்குப் பதிவு

மும்பை: லண்டனிலிருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறையில் புகைப்பிடித்த அமெரிக்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை காவல் துறை நேற்று கூறியது: மார்ச் 11-ம் தேதி லண்டனில் இருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ரமகாந்த் (37) என்பவர் பயணம் செய்துள்ளார். அமெரிக்க குடிமகனான அவர் சக பயணிகளிடமும், விமான பணியாளர்களிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு விமானத்தின் கதவை திறக்க முற்பட்டுள்ளார். பின்னர், விமானத்தின் கழிவறைக்கு சென்று ஆபத்தை விளைவிக்கும் … Read more

தமிழகத்தில் மீண்டும் கொரோனா விதிமுறைகள்: அமைச்சர் கொடுத்த எச்சரிக்கை!

காய்ச்சல் வந்தவர்கள் மூன்று நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இன்புளூயன்சா துணை வகை வைரஸான எச்3என்2 பரவி வருகிறது. ஜனவரி 2ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை மட்டும் 450க்கும் மேற்பட்டோர் இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த காலகட்டத்தில் இத்தகைய தொற்று பரவல் வாடிக்கை தான் என்றாலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட 2 அல்லது 3 … Read more

ஸ்பெயினில் கடும் வெயிலால் வழக்கத்தை விட பலமடங்கு அதிக வெப்பம்

ஸ்பெயினில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வெப்பம் பதிவாகியுள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே ஸ்பெயினில் வெப்ப காற்றானது வழக்கத்துக்கு மாறாக அதிகரித்து காணப்படுகிறது. சராசரி வெப்பநிலையை விட 7 முதல் 13 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். சில பகுதிகளில் 30 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவாகி உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். Source link

கனடாவில் இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் செய்திகளை வாசிக்க முடியாது!

கனேடியர்கள் இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் செய்திகளைப் படிக்க முடியாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையச் செய்திச் சட்டம் கனேடிய அரசு முன்மொழியப்பட்ட இணையச் செய்திச் சட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், கனேடியர்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்திகளைப் படிக்க முடியாதென இவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்டா செய்தி தொடர்பாளர் லிசா லாவென்ச்சர் ”கனேடிய அரசின் விதிகள் நிறைவேற்றப்பட்டால் கனேடியர்கள் இனி மெட்டாவின் கீழ் இயங்கும் சமூக வலைத்தளங்களின் மூலம் செய்திகளின் … Read more

ஆன்லைன் ரம்மி தடை மசோதா ஆளுநர் திருப்பி அனுப்பியது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்: கே.எஸ்.அழகிரி பேட்டி

திட்டக்குடி: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் என்று கே.எஸ்.அழகிரி கூறினார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் நேற்று நடந்த கொடியேற்று விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் திமுக அரசு, கலைஞர் காலத்திலிருந்தே விவசாயிகளுக்கு ஆதரவாகவே உள்ளது. 1996ல் முதல்வராக கலைஞர் இருந்தபோது, ஆலோசனைக்குழு அமைத்து ஒன்றிய அரசுடன் பேசி என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக … Read more

95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது

அமெரிக்கா: சிறந்த ஒளிப்பதிவு – All Quiet on the Western Front, சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது All Quiet on the Western Front படத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஃபிரெண்டுக்கு வழங்கப்பட்டது.

எல்லா தேர்தலும் எங்களுக்கு அக்னி பரீட்சைதான்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கருத்து

பெங்களூரு: தேர்தல் ஆணையத்துக்கு அனைத்து தேர்தல்களுமே அக்னிப்பரிட்சை தான் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜ ஆட்சி முடிவடைய உள்ள நிலையில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து தேர்தல் முன்னேற்பாடுகளை பார்வையிட தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர் கர்நாடகா சென்றுள்ளனர். இந்நிலையில், கர்நாடகாவில் சுதந்திரமான, வௌிப்படையான தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் … Read more