”பத்திரப்பதிவு முறைகேடுகள் மீது 3 மாதத்துக்குள் நடவடிக்கை” – அமைச்சர் பி மூர்த்தி பேட்டி

கடந்த ஆண்டை விட வணிவரித்துறையில் 24 ஆயிரம் கோடி ரூபாயும், பதிவுத்துறையில் 3500 கோடி ரூபாய் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக்குழு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு “மகிழட்டும் மாற்றுத்திறனாளி வழங்குவோர் திராவிட போராளி” என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூர் அருகே பாடி இளங்கோ நகர் பகுதியில் நடைபெற்றது. ஆதிதிராவிட நலக்குழு … Read more

காஷ்மீர் எல்லை பகுதி அருகே ஆயுதம், போதைப்பொருள் மீட்பு | Arms, drug recovery near Kashmir border area

ரஜோரி : ஜம்மு – காஷ்மீரில் எல்லை பகுதி அருகே ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை ராணுவத்தினர் நேற்று கைப்பற்றினர். ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஜாங்கரில் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட இருப்பதாக ராணுவத்தினருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட ராணுவத்தினர், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி அருகே இரு அதிநவீன கைத்துப்பாக்கிகள், வெடி பொருட்கள் மற்றும் 2 கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து … Read more

திருச்சி: சாதி சான்றிதழ் மனுவை நிராகரித்த அதிகாரி; ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவு

திருச்சி: சாதி சான்றிதழ் மனுவை நிராகரித்த அதிகாரி; ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவு Source link

தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 13-ம் தேதி(இன்று) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 14, 15-ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், … Read more

திருப்பதி அருகே சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதி அருகே நேற்று காலை டேங்கர் லாரி எதிரே வந்த 2 கார்கள் மீது மோதியதில் லாரி ஓட்டுனர் உட்பட மொத்தம் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பதியிலிருந்து சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்த டேங்கர் லாரி நகரி அருகே உள்ள தர்மபுரம் எனும் இடத்தில் வந்தபோது, திடீரென நிலை இழந்து எதிரே வந்த 2 கார்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒவ்வொரு காரிலும் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். … Read more

தெலங்கானா முதல்வர் மருத்துவமனையில் அனுமதி: என்ன பிரச்சினை?

தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் வயிற்று வலி காரணமாக நேற்று (மார்ச் 12) ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்வை மருத்துவமனையின் தலைவரும் இரப்பை குடல் இயல் நிபுணருமான மருத்துவர் டி.நாகேஷ்வர் ரெட்டி பரிசோதித்தார். வயிற்று உபாதை மற்றும் வயிற்றில் அல்சர் இருப்பது மருத்துவப் பரிசோதனையின் போது கண்டறியப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அல்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, மற்ற அனைத்து அளவுருக்களும் இயல்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “அவர் … Read more

ஆளுநருக்கு கருப்புக்கொடி மார்க்சிஸ்ட் கம்யூ. கைது

கோவை: கோவையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.  தமிழ்நாடு ஆளுநர்ஆர். என்.ரவி ஊட்டி ராஜ்பவனில் தங்கியிருந்தார். அவர் நேற்று கார் மூலம் கோவை ஈஷா யோக மையத்திற்கு சென்றார். பின்னர் மதியம்  காரில் கோவை விமான நிலையம் சென்று, விமானத்தில் சென்னை திரும்பினார். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் அவினாசி ரோடு சித்ரா அருகே மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட … Read more

திரையுலகின் மிக உயரிய விருதான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது

லாஸ் ஏஞ்சல்ஸில்: திரையுலகின் மிக உயரிய விருதான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கியது. ஆஸ்கர் விழா மேடையில் இசையமைப்பாளர்கள் கீரவாணி குழுவினர் நாட்டு நாட்டு பாடலை இசைக்க உள்ளனர்.

அநீதிக்கு எதிரான தண்டி யாத்திரை எப்போதும் நினைவு கூரப்படும்: பிரதமர் மோடி டிவிட்

புதுடெல்லி: அநீதியை எதிர்த்தும், நாட்டின் சுயமரியாதையை பாதுகாக்கவும் நடத்தப்பட்ட தண்டி யாத்திரை எப்போதும் நினைவு கூரப்படும் என பிரதமர் மோடி கூறினார். கடந்த 1930ம் ஆண்டு நடந்த  உப்பு சத்தியாகிரகம் தண்டி யாத்திரை என அழைக்கப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தண்டி யாத்திரை மிக முக்கிய நிகழ்வாகும். பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து நடந்த ஒத்துழையாமை இயக்கத்தின் போது,1930 மார்ச் 12ம் தேதி அகமதாபாத்,சபர்மதி ஆசிரமத்தில் இருந்து  கடலோர கிராமமான தண்டிக்கு மகாத்மா காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். பிரிட்டிஷ் … Read more