நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம் – கைதான ஹரிஷின் வங்கி கணக்குகள் முடக்கம்

சென்னை: நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹரிஷின் வங்கிக் கணக்கை போலீஸார் முடக்கி உள்ளனர். சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் கடந்த 26-ம் தேதி திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பின் இயக்குநர் ஹரிஷ் செய்திருந்தார். இதில், இசையமைப்பாளர் தேவா, சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் … Read more

80 வயதில் மகனுக்காக காத்திருகும் தாய் !கண்டுகொள்ளாத தமிழர் நலம் பேசும் அரசியல் வாதிகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களின் நிலை இன்னும் மர்மமாக நீடித்து வருகிறது என்று வழக்கறிஞர் ஜான்சன் ஐபிசிக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் ஜான்சன் சிறப்பு பேட்டி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, 32 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் பெயரில் 11/11/2022ல் 7 பேர் விடுவிக்கப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேறும் இந்திய … Read more

என்எல்சியை கண்டித்து பாமக போராட்டம் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனம் தீப்பற்றி எரிந்து நாசம்

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக பாமக சார்பில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கின. மேலும் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. பாதுகாப்புக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 7,000க்கும் மேற்பட்ட போலீசார்  வந்திருந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து வந்த அதிவிரைவு படையினர் நெய்வேலி வடக்குத்து காவல்நிலையம் அருகில், நேற்று முன்தினம் நள்ளிரவு தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்கி இருந்தனர். … Read more

ஆந்திரா மாஜி முதல்வர் கிரண்குமார் ரெட்டி காங்.கில் இருந்து விலகல்: பாஜவில் இணைகிறார்

ஐதராபாத்: ஆந்திரா முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி காங்கிரசில் இருந்து நேற்று விலகினார். அவர் விரைவில் பாஜவில் இணைகிறார்.ஆந்திராவில் கடந்த 2010 முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்தவர் கிரண்குமார் ரெட்டி. இவர், தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும், தொடர்ந்து காங்கிரசில் மூத்த தலைவராக இருந்து வந்தார். அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் சேர பேரம் பேசி வருவதாக கடந்த சில … Read more

கோமதி நதியை காப்பாற்ற உ.பி., பெண் பாதயாத்திரை| UP Women Walk to Save Gomati River

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஷாஜஹான்புர் :மாசடைந்து, சுருங்கி வரும் கோமதி நதியைக் காப்பாற்றும் நோக்கத்தில், மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஆர்வலர், ௬௯௦ கி.மீ., துார பாதயாத்திரையை மேற்கொண்டுஉள்ளார். உத்தர பிரதேசத்தில் கங்கை நதியின் கிளை நதியான கோமதி நதி, 690 கி.மீ., துாரத்துக்கு பயணம் செய்கிறது. ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுகள் சேர்க்கப்படுவதால், இந்த நதி மாசடைந்து வருகிறது. பல இடங்களில் சுருங்கியுள்ளது. ஒரு காலத்தில் வற்றாத நதியாக … Read more

பச்சை நிறமாக மாறிய சிகாகோ ஆறு | The Chicago River turned green

சிகாகோ : அமெரிக்காவில் உள்ள சிகாகோ ஆறு, புனித பாட்ரிக் பண்டிகையை ஒட்டி பச்சை நிறமாக மாறியுள்ளது, பார்வையாளர்களை பரவசப்படுத்திஉள்ளது. அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில், 5ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மதகுருவான புனித பாட்ரிக்கை நினைவு படுத்தும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 17ல் புனித பாட்ரிக் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின்போது, இங்குள்ள மக்கள் பச்சை நிற ஆடை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சிகாகோ நகரில் பாயும் சிகாகோ ஆற்றை பச்சை நிறமாக … Read more

ஆன்லைன் செயலி மூலம் கடன்.. திருச்சி பெண்ணுக்கு கொடுமை.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ஆன்லைன் செயலி மூலம் கடன்.. திருச்சி பெண்ணுக்கு கொடுமை.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை Source link

சாதி சான்றிதழ் வழங்க மறுத்த கோட்டாட்சியருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் – உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்சியைச் சேர்ந்த நித்யா, தனது மகன், மகளுக்கு காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியரிடம் மனு அளித்தார். இவரது மனுவை நிராகரித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து, தனது மகன், மகளுக்கு காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி நித்யா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கணவர் காட்டுநாயக்கன் சமூகத்தைச் … Read more

மது போதையில் திருமண மேடையில் படுத்து உறங்கிய மணமகன்: கோபத்தில் மணமகள் அதிரடி முடிவு

அசாமில் திருமண மேடையின் மேல் குடிபோதையில் மணமகன் படுத்து உறங்கியதால், மணமகள் திருமணத்தை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளார். குடிகார மணமகன் இந்தியாவின் அசாம் மாநிலம் நல்பார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திருமணம், மணமகன் செயலால் நிறுத்தப்பட்டுள்ளது. திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்த மணமேடைக்கு மணமகன் குடிபோதையில் வந்ததால், மணமகள் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மணமகன் பிரசென்ஜித் ஹாலோய்-ஆல் (Prasenjit Haloi) நிலையாக உட்கார கூட முடியாமல் மணமேடையிலேயே படுத்து உறங்கியதால் மணமகளின் வீட்டார் … Read more

ஆந்திர வனப்பகுதிக்கு அருகே உள்ள சைலம் கோயிலுக்கு சொந்தமான ரூ.2,000 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

திருமலை:  ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள சைலம் மல்லிகார்ஜூன சுவாமி  கோயில் நல்லமலா வனப்பகுதிக்கு அருகே உள்ளது. கோயில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை வனத்துறை- மாநில இந்து அறநிலையத்துறைக்கு இடையே கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் இருந்து வந்தது. இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று எம்எல்ஏ ஷில்பா சக்கரபாணி, வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, வனத்துறை தலைமை வன பாதுகாவலர் மதுசூதன் மூத்த அதிகாரிகளை நியமித்தார். கோயிலின் … Read more