கைதிகள் பரிமாற்றம் அமெரிக்கா – ஈரான் பேச்சு| US-Iran Talks on Prisoner Exchange
துபாய் :ஈரான் – அமெரிக்கா இடையே, கைதிகள் பரிமாற்றம் விரைவில் துவங்க உள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹோசைன் அமிராப்தோல்லாஹியன் தெரிவித்தார். மேற்காசிய நாடான ஈரான் சிறையில் நான்கு அமெரிக்கர்கள் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளனர். உளவு பார்த்த குற்றத்துக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல, அமெரிக்க சிறையிலும் ஈரானியர்கள் பலர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இரு நாடுகள் இடையே கைதிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஈரான் அரசு அவ்வப்போது தெரிவித்து வருகிறது. … Read more