கர்நாடகாவில் ரூ.16,000 கோடியில் மக்கள் நலத்திட்டங்கள்.. பிரதமர் மோடி அடிக்கல்..!

கர்நாடகாவில், 16 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பெங்களூரு – மைசூரு அதிவிரைவு சாலை, தார்வாத் ஐஐடி வளாகத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கச்சென்ற பிரதமர் மோடிக்கு, சாலையின் இருபுறமும் நின்று, பொதுமக்களும், பாஜகவினரும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்கள் வரவேற்பை ஏற்கும் விதமாக, பிரதமர் மோடி, கார் படியில் நின்று, கைகளை அசைத்தவாறு நீண்ட தூரம் சென்றார். … Read more

'இந்தியாவுக்கு ஒத்து வராது' தன்பாலின திருமணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு

‘இந்திய குடும்ப கட்டமைப்புக்கு ஒத்து வராது’ என கூறி உச்ச நீதிமன்றத்தில் தன்பாலின திருமணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தன்பாலின திருமணத்திற்கு (Same-Sex Marriage) மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ஓரினச்சேர்க்கை மற்றும் ஒரே பாலின உறவை இந்திய குடும்பம் என்ற கருத்துடன் ஒப்பிட முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுவை எதிர்த்து மத்திய அரசு … Read more

கள்ளநோட்டு வழக்கில் கைதான விவசாயத்துறை பெண் அதிகாரிக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா?: பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள எடத்துவாவில் விவசாயத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ஜிஷா மோள் (38). கடந்த சில தினங்களுக்கு முன் ₹500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட சம்பவத்தில் இவரை போலீசார் கைது செய்தனர். எடத்துவா பகுதியை சேர்ந்த ஒரு வியாபார நிறுவனத்திலிருந்து ஆலப்புழாவில் உள்ள ஒரு வங்கியில் ₹50 ஆயிரம் பணம் முதலீடு செய்யப்பட்டது. அதில் இருந்த ₹500 நோட்டுகளில் 7 நோட்டுகள் கள்ளநோட்டுகள் என தெரியவந்தது.இது குறித்து வங்கி அதிகாரிகள் … Read more

நம்பிக்கையே சூப்பர் ஹியூமனாக மாற்றும்: சமந்தா

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. சமீபத்தில் மயோசிட்டிஸ் என்ற அரியவகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது குணமாகி உள்ளார். இவர் நடித்த 'சாகுந்தலம்' திரைப்படம் ஏப்.,14ல் வெளியாகிறது. இதனையடுத்து விஜய் தேவரகொண்டா உடன் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது வீட்டில் உள்ள லிங்க பைரவி முன் அமர்ந்து வழிபடும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதில் அவர், 'சில சமயங்களில் சூப்பர் ஹியூமன் சக்தி தேவையில்லை … Read more

இளம்பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி.. மதுரை ஆட்டோ ஓட்டுநர் சிக்கியது எப்படி?

இளம்பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி.. மதுரை ஆட்டோ ஓட்டுநர் சிக்கியது எப்படி? Source link

காஞ்சிபுரம் | பாஜக பிரமுகரின் தாய், தந்தை அடுத்தடுத்த நிமிடங்களில் மரணம்! சோகத்தில் அரசியல் கட்சியினர்!

காஞ்சிபுரத்தில் கணவன் இறந்த செய்திகேட்டு, மனைவியும் மாரடைப்பால் பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. பாவாபேட்டை தெருவை சேர்ந்த பாஜக தமிழ்நாடு மாநில அமைப்பு சாரா தொழிலாளர் சங்க துணைத் தலைவர் கணேஷ்.  இவரின் தந்தை துரைசாமி (வயது 77), தாய் மல்லிகா (வயது 68) இருவரையும் இவரே கவனித்து வருகிறார். இந்த நிலையில், சம்பவம் நடந்த இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த துரைசாமிக்கு, திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு துரைசாமி கொண்டு … Read more

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2000 பேர் நியமனம் – 10 தினங்களில் முடிவாகும் என அமைச்சர் தகவல்

கள்ளக்குறிச்சி: மருத்துவர், துணை சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் உதவியாளர்கள் என 2000 மருத்துவப் பணியாளர்கள் மாநில மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யும் பணி 10 தினங்களில் முடிவாகும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கள்ளக்குறிச்சியில் அறிவித்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கட்டிடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் ஆட்சியர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் … Read more

‘என் நிலத்தில் என் மொழி தான் பேசனும்’ – கெத்து காட்டிய ஆட்டோ ஓட்டுநர்.!

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. அது பிரதமர் நேரு என்றாலும் சரி மோடி என்றாலும் சரி. இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகம் கண்ட மாபெரும் போராட்டங்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு உள்ளூர் மொழிகளை அழித்து தான் இந்தி மொழி பரவியது என்பது மொழியியளார்களின் குற்றச்சாட்டு. இந்தியை தேசிய மொழியாக்குவதன் மூலம் தமிழ், குஜராத்தி, மராட்டி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழிகளை பேசும் மக்கள் … Read more

Oscar 2023: தொகுப்பாளருக்கு முத்தம் முதல் அறை வரை… ஆஸ்கார் விருது வரலாற்றில் படிந்த நீங்கா கறைகள்

Controversies Over Oscar Awards: 95ஆவதுஆஸ்கார் விருது விழாவுக்கான நேரம் நெருங்கிவிட்டது. அமெரிக்காவின் நேரப்படி, அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி தியேட்டரில் மார்ச் 12ஆம் தேதி மாலை நடைபெறும் ஆஸ்கார் விருது விழா உலகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பாக உள்ளது. இந்தியாவில் நாளை (மார்ச் 13) அதிகாலை 5.30 மணிக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிப்பரப்பாகிறது.  இந்தியா சார்பாக, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல், சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவிலும், … Read more

இந்திய நேரப்படி நாளை அதிகாலை ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா… இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட பாடலும், படங்களும் விருதுகளை வெல்லுமா.?

95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி நாளை அதிகாலை நடைபெற உள்ள நிலையில், இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட பாடலும், படங்களும் விருதுகளை வெல்லுமா? என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. லாஸ் ஏஞ்சலிசில் நடைபெறும் விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. முதன்முறையாக இந்த ஆண்டு 3 இந்திய படங்கள் மூன்று பிரிவுகளில் இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் கீரவாணி இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ … Read more