கத்தி முனையில், மகனிடம் பணம் பறிக்க முயன்ற தந்தை கைது..!

ஸ்காட்லாந்தில், தனது மகன் என்றே தெரியாமல் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற தந்தை கைது செய்யப்பட்டார். 17 வயது சிறுவன் ஒருவன், ஏ.டி.எம்-இல் ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளான். அங்கு முகக்கவசம் அணிந்தபடி நின்ற 45 வயது ஆசாமி, திடீரென சிறுவனின் கழுத்தை பின்னால் இருந்து பிடித்து, சுவற்றோடு சிறுவனை சாய்த்து, முகத்தில் கத்தியை வைத்து பணத்தை தருமாறு கேட்டுள்ளார். குரலை வைத்து தந்தையை அடையாளம் கண்ட சிறுவன், முகத்தை மறைக்கும் வண்ணம் அணிந்திருந்த … Read more

சிக்கிமில் திடீர் பனிப்பொழிவால் சாங்கு ஏரியில் சிக்கிக்கொண்ட 370 பேரை மீட்ட ராணுவம்..!

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சாங்கு ஏரியில் நிலவிய கடும் பனிப்பொழிவில் சிக்கித்தவித்த 370 சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது. கிழக்கு சிக்கிமில் உள்ள சோம்கோ எனப்படும் சாங்கு ஏரி, ஒவ்வொரு பருவ காலத்திலும் வெவ்வேறு நிறத்தில் காட்சியளிப்பதோடு, குளிர்காலத்தில் உறைந்து காணப்படும் என்பதால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் இந்த ஏரிக்கு வந்துச்செல்கின்றனர். அவ்வாறு, சுற்றுலாவிற்காக வந்திருந்த நிலையில், அங்கு நிலவிய கடும் பனிப்பொழிவால் சுற்றுலா பயணிகள் ஏரியை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதை … Read more

துரத்திய நாய்களிடமிருந்து தப்பி ஓடியபோது கிணற்றில் விழுந்த குட்டி யானை: போராடி உயிருடன் மீட்பு

பென்னாகரம்: பென்னாகரம் அருகே நாய்களிடமிருந்து தப்பித்து ஓடியபோது கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நீர்குந்தி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக 3 வயது மதிக்கத்தக்க பெண் குட்டி யானை ஒன்று சுற்றி வந்தது. நேற்று காலை இந்த குட்டி யானையை அப்பகுதியில் உள்ள நாய்கள் துரத்தியுள்ளன. அப்போது, அங்கிருந்து ஓடிய குட்டி யானை நீர்குந்தி கிராமத்தில் உள்ள செல்வம் என்பவருக்கு சொந்தமான 20 அடி … Read more

மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது உ.பி. வாரியார்ஸ் அணி

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் உ.பி. வாரியார்ஸ் அணி 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. உ.பி. வாரியார்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அலிசா ஹீலி 58 ரன்களும், தஹ்லியா மெக்ராத் 50 ரன்களும் விளாசினார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 22ம் தேதி உகாதி ஆஸ்தானம் 2 நாளுக்கு விஐபி தரிசனம் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 22-ம் தேதி உகாதி (தெலுங்கு வருடபிறப்பு) ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் சேவைக்கு பின்னர் காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி-பூதேவியுடன் மலையப்ப சுவாமி, விஷ்வ சேனாதிபதிக்கு சிறப்பு பிரசாதம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. காலை 7 மணி முதல் 9 மணி வரை ஆனந்த நிலையம் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி ஊர்வலமாக கோயிலுக்குள் உற்சவ மூர்த்திகள் வலம் வந்து மூலவருக்கும், உற்சவர் … Read more

பேஷன் ஷோவில் உள்ளாடை அணியாமல் படு கவர்ச்சியாக கலந்து கொண்ட டாப்ஸி!

ஆடுகளம் டாப்ஸி தற்போது தமிழில் ஜெயம் ரவியுடன் ஜன கன மன மற்றும் ஏலியன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது டாப்சி, பான் இந்தியா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில் படு கவர்ச்சியாக உடை அணிந்து அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக உள்ளாடை அணியாமல் மேலாடை அணிந்தபடி … Read more

செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து! 20 பேரின் நிலை என்ன?!

செங்கல்பட்டு அருகே தமிழக அரசு பேருந்தும், கனரக டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் நோக்கி தமிழக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்து. இந்த பேருந்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாக தெரிகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே முகாலி நத்தம் பகுதி அருகே இந்த பேருந்து வந்து கொண்டிருந்தபோது, … Read more

பாலியல் தொல்லைக்கு ஆளான ஜப்பானிய பெண் உருக்கமான பதிவு!!

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான ஜப்பானிய இளம்பெண் இந்தியா குறித்து உருக்கமாக ட்வீட் செய்துள்ளார். டெல்லி பகர்கஞ்ச் பகுதியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பான் நாட்டை சேர்ந்த 24 வயது இளம்பெண் மீது வண்ணம் பூசிய இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குக் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வீடியோவை ஆதாரமாக வைத்து ஜப்பான் பெண்ணிடம் அத்துமீறிய 3 இளைஞர்களை போலீஸார் … Read more

சிகிச்சைக்கு வந்த இளைஞரை அடித்தே கொன்ற ஊழியர்கள்!!

போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்காக வந்த நபரை 8 பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் படான் பகுதியை அடுத்து ஜியோனா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மேசானா என்ற பகுதியை சேர்ந்த ஹர்திக் சுதார் (25) என்ற இளைஞர் அங்கு அனுமதிக்கப்பட்டார். இந்த மறுவாழ்வு மையத்தில் சேர்ந்ததில் இருந்தே தன்னை வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு மேலாளரிடம் … Read more