`பணப் பிரச்னையில் பாலிவுட் நடிகர் சதீஷ் கெளசிக் படுகொலையா?' – பெண்ணின் புகாரை விசாரிக்கும் போலீஸ்
பாலிவுட் நடிகர் சதீஷ் கெளசிக் கடந்த 9-ம் தேதி டெல்லியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதையடுத்து அவருடைய உடல் மும்பை கொண்டுவரப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. இறுதிச்சடங்கில் நடிகர் சல்மான் கான் உட்பட பாலிவுட் பிரபலங்கள் திரளாகக் கலந்துகொண்டு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர். சதீஷ் கெளசிக் இறந்து சில நாள்களே ஆகியிருக்கும் நிலையில், அவர் கொலைசெய்யப்பட்டதாக டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்திருக்கிறார். டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் விகாஷ் என்பவரின் மனைவி, இது தொடர்பாக டெல்லி … Read more