#சென்னை | கிருஸ்துவ சபை கூட்டத்தால் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்! கடும் போக்குவரத்து நெரிசல்!
தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் அமைந்துள்ள பெந்தகோஸ்தே கிறிஸ்தவ சபையின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், நாடுகளிலிருந்து சுமார் 1000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாலை இந்த கூட்டம் முடிந்து ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றதால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன. குறிப்பாக இரும்புலியூர் ஏரிக்கரை பகுதியில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது. … Read more