அஞ்செட்டி அருகே சாலையோரம் நீண்ட நேரம் நின்ற ஒற்றை யானையால் பீதி: வாகன ஓட்டிகள் அச்சம்

தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, மறுபக்கம் செல்வதற்காக சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள யானைகள், கோடை தொடங்கி உள்ளதால் உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது சாலையை கடந்து, மறுபக்கம் உள்ள காட்டிற்குள் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஒற்றை யானை ஒன்று, அஞ்செட்டி – தேன்கனிக்கோட்டை சாலையோரம் காட்டுப் பகுதியில் நின்றிருந்தது. இதைப்பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், வாகனங்களை சாலையில் … Read more

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவு

நய்பிடாவ்: மியான்மரில் பூமிக்கு அடியில் 73 கிலோமீட்டர் ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவாகியுள்ளது.

டிஜிட்டல் மயமாக்கல் மூலம் காகிதமில்லா நீதிமன்றங்களே நீதித்துறையின் இலக்கு: சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி கருத்து

புதுடெல்லி: டெல்லியில் ‘ஸ்மார்ட் நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறையின் எதிர்காலம்’ என்ற கருத்தரங்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘மின்னணு நீதிமன்றங்கள் என்பது எதிர்காலத்தின் நீதித்துறைக்கு அடிப்படையாது. டிஜிட்டல் மயமாக்கல், ஆன்லைன் மனு தாக்கல், காணொலி விசாரணை, மின்னணு ஆவணங்கள் போன்றவற்றின் மூலம் காகிதமில்லா நீதிமன்ற நடவடிக்கைகளை கொண்டு வரமுடியும். எதிர்காலத்தில் அவ்வாறு தான் இருக்கும். நீதிமன்ற விசாரணைகளை மக்கள் பார்க்கும் வகையில், ஆடியோ-வீடியோ ஸ்ட்ரீமிங் வசதியும் செய்து தரப்படும். இந்தியா … Read more

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை துவக்கம்| Budget session of Parliament to resume on March 13

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: 2023-24 ம் ஆண்டுக்கான பார்லிமென்ட் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை (மார்ச் 13) துவங்க உள்ளது. பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.,31ம் தேதி துவங்கி ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளுடன் 66 நாட்கள் நடக்கும் எனவும், பிப்.,14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் ஜன.,31ல் துவங்கியது. பிப்.,1ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. … Read more

சந்திரமுகி-2வில் மாற்றுத்திறனாளியாக நடிக்கும் லட்சுமி மேனன்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படத்தை இயக்கி வருகிறார் பி வாசு. இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே ஆகிய நடிகைகள் நடித்து வருகின்றனர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு லட்சுமி மேனன் தற்போது தமிழில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க ஆர்வம் காட்டி படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் … Read more

எனக்கு கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது: பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தாண்டியா மாவட்டத்தில் அவர் பேசியதாவது:கடந்த சில நாட்களாக பெங்களூரு மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலை குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. நமது நாட்டின் வளர்ச்சியை கண்டு பெருமையுடன் இளைஞர்கள் செல்பி எடுத்து கொள்கின்றனர். அனைத்து திட்டங்களும், வளர்ச்சி மற்றும் செழுமையை கருத்தில் கொண்டு அனைத்து திட்டங்களும் திறந்து வைக்கப்படுகின்றன. கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் மைசூரு முக்கியமான நகரங்கள். ஒரு நகரம் தொழில்நுட்பத்திற்கும், மற்றொரு நகரம் பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்றது. இரு நகரங்களையும் தொழில்நுட்பங்கள் … Read more

உச்சபட்ச பரபரப்பு: நாளை கடைசி நாள் ஆட்டம்… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லுமா இந்தியா..?

மும்பை, ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்தியா சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரின் சதத்தின் உதவியுடன் இதுவரை 5 விக்கெட் … Read more

இங்கிலாந்து அரசை விமர்சித்த தொகுப்பாளரை பணி இடைநீக்கம் செய்த பிபிசி…!

லண்டன், இங்கிலாந்து நாட்டின் செய்தி நிறுவனம் பிபிசி. இந்நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தங்கள் கிளை அலுவலகங்களை திறந்து செய்திகளை ஒளிபரப்பி வருகிறது. இதனிடையே, பிபிசி செய்தி நிறுவனத்தின் விளையாட்டு பிரிவு தொலைக்காட்சியில் (பிபிசி ஸ்போர்ட்ஸ்) பிரபலமான நிகழ்ச்சி ‘மேட்ச் ஆப் தி டே’. இது கால்பந்து போட்டி தொடர்பாக வார இறுதியில் நடைபெறும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை ஹெரி லிங்கர் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், இங்கிலாந்து அரசின் புதிய அகதிகள் கொள்கை குறித்து ஹெரி லிங்கர் … Read more

மதுரை விமான நிலையத்தில் முகநூலில் நேரலை செய்தவர் மீது தாக்குதல்; இ.பி.எஸ் மீது வழக்குப் பதிவு

மதுரை விமான நிலையத்தில் முகநூலில் நேரலை செய்தவர் மீது தாக்குதல்; இ.பி.எஸ் மீது வழக்குப் பதிவு Source link