ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 571 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட்

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 571 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவை விட 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி வீரர் விராட் கோலி 364 பந்துகளில் 186 ரன்கள் எடுத்த நிலையில் மர்ஃபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மேற்குவங்கத்தில் 3வது முறையாக வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்றாவது முறையாக மீண்டும் கற்கள் வீசப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர். மேற்குவங்க மாநிலம் ஃபராக்கா அடுத்த முர்ஷிதாபாத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த போது, அந்த ரயிலின் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. கல்வீச்சில் யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை. இதுகுறித்து கிழக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (சிபிஆர்ஓ) … Read more

தடுமாறுகிறதா தமிழ் சினிமா? தாவிச் செல்லும் தெலுங்கு, கன்னடத் திரையுலகம்

இந்திய சினிமா என்றால் ஹிந்தி சினிமா என்றுதான் சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு அடையாளமாக இருந்தது. இந்தியாவிலிருந்து உலக அளவில் வெளியாகும் படங்கள் என்றால் அது ஹிந்திப் படங்களாகத்தான் இருக்கும் என்பதுதான் பலரது நினைப்பாக இருந்தது. ஆனால், இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, பெங்காலி, மராத்தி என பல மொழித் திரைப்படங்களும் தயாராகி வெளியாகிறது என்பது வெளிநாடுகளில் உள்ள பலருக்கும் தெரியாமல் இருந்தது. அப்படி ஒரு அடையாளத்தை ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த தெலுங்குப் … Read more

பெங்களூரு- மைசூரு இடையேயான விரைவுச்சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

பெங்களூரு, பெங்களூரு-மைசூரு இடையே 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.8 ஆயிரத்து 480 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு 75 நிமிடங்களில் இந்த விரைவுச்சாலையில் செல்ல முடியும். இந்த சாலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன்படி, பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை உள்பட ரூ.16 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கிவைத்தார். இந்த சாலை மூலம் பெங்களூருவில் இருந்து குடகு, ஊட்டி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவாக செல்ல … Read more

களத்திலே உயிரிழந்த கால்பந்து வீரர்.. இளம் வயது மாரடைப்பால் பலி

கோஸ்ட், ஐவரி கோஸ்ட் நாட்டில் அபிட்ஜான் மைதானத்தில் உள்ளூர் கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டில் அந்நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் முஸ்தபா சைல்லா ரேசிங் கிளப் அணிக்காக விளையாடினார். இந்த நிலையில், கோல் போஸ்ட் அருகில் விளையாடிக் கொண்டிருந்த முஸ்தபா சைல்லா திடீரென மைதானத்திலே கிழே சரிந்து விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் முஸ்தபா சைல்லா … Read more

ஈரான்-சவுதி அரேபியா இடையே மீண்டும் தூதரக உறவு

பீஜிங், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் கடந்த 2016-ம் ஆண்டு ஷியா பிரிவு மதகுரு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு, ஷியா பிரிவினர் அதிகம் வாழும் ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இதற்கு பழிவாங்கும் விதமாக ஈரானில் உள்ள சவுதி அரேபியா தூதரகங்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது இருநாடுகள் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து ஈரானுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக சவுதி அரேபியா அறிவித்தது. இந்த நிலையில் … Read more

அடுத்தடுத்து நடக்கும் ரெய்டுகள்… “காங்கிரஸ் பாணியையே பாஜக-வும் தொடர்கிறது!" – அகிலேஷ் யாதவ்

சமீபகாலமாகவே காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள், அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஒருவர், பிரதமர் மோடிமீது பல விமர்சனங்களை முன்வைத்தார். இந்த நிலையில், தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவும் அமலாக்கத்துறையின் இந்த சோதனை மற்றும் நடவடிக்கைகளை விமர்சனம் செய்திருக்கிறார். அகிலேஷ் யாதவ் அகமதாபாத்தில் நேற்றைய தினம் (11-3-23) பத்திரிகையாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “கடந்த காலங்களில் குஜராத்தைச் சேர்ந்த … Read more

சாதிப் பெயர் சொல்லி மிரட்டும் கணவனின் சித்தப்பா மீது புகார் அளிக்க, வளைகாப்பு முடிந்த கையோடு காவல் நிலையம் சென்ற கர்ப்பிணி..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தில், சாதி பெயரைச் சொல்லி மிரட்டல் விடுக்கப்படுவதாக கர்ப்பிணி ஒருவர், வளைகாப்பு முடிந்த கையோடு கணவனுடன் காவல்நிலையம் சென்று புகாரளித்தார். கல்பனா என்ற அந்தப் பெண்ணும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இருவேறு சமூகங்களை சேர்ந்தவர்களாயினும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருப்பினும் வெங்கடேசனின் சித்தப்பாவான செல்வம் என்பவர் மட்டும் கல்பனாவை ஏற்றுக் கொள்ளாமல், அவ்வப்போது சாதிப் பெயரைச் சொல்லி வசைபாடி வந்தார் என்று … Read more

தமிழகத்தில் நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு: தேர்வெழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழகத்தில் நாளை (மார்ச் 13) நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: “என் பேரன்பிற்குரிய 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகளே அனைவருக்கும் என் அன்பு வணக்கம். என்ன பரீட்சை கவலையில் இருக்கிறீர்களா? ஒரு கவலையும் வேண்டாம், எந்த பயமும் வேண்டாம். இது இன்னொரு பரீட்சை, அவ்வளவுதான். அப்படித்தான் இதை நீங்கள் அணுக … Read more