பொதுத்தேர்வு: பரீட்சை கவலையில் இருக்கிறீர்களா? எந்த பயமும் வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்புக்கு வரும் 13-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு 14-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 6-ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன. அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது. மாணவர்கள் தேர்வெழுதும்போது மின் தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகளை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல, பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பொதுதேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு தமிழக முதல்வர் வீடியோ வாயிலாக … Read more

சால்ட் அண்ட் பெப்பரில் விஜய் – அப்போ லியோ கதை இப்படித்தான் இருக்குமாம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம், ‘லியோ’. இதில் த்ரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது வில்லன்கள் லிஸ்டில் நடிகர் பாபு ஆண்டனியும் இணைந்துள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் லியோ படத்தில் சஞ்சய் தத் காஷ்மீர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இணைந்த வீடியோவை படக்குழு நேற்று பகிர்ந்துள்ளது.  அந்த … Read more

துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க பஞ்சாப் அரசு தீவிரம்.. 813 துப்பாக்கி உரிமங்கள் ரத்து..!

பஞ்சாபில் துப்பாக்கிக்கலாச்சாரத்தை ஒழிக்க, அம்மாநில அரசு 813 துப்பாக்கி உரிமங்களை ரத்து செய்துள்ளது. பஞ்சாபில் பொது நிகழ்ச்சிகள், மத வழிபாட்டுத்தல நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்டவற்றிற்கு, துப்பாக்கிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அமன் அரோரா தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பஞ்சாபில் மொத்தம் 3 லட்சத்து 73 ஆயிரத்து 53 துப்பாக்கி உரிமங்கள் உள்ளதாகவும், இதுவரை இரண்டாயிரம் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அம்மாநில … Read more

அழிவின் விளிம்பில் இருக்கும் பாகிஸ்தான்! கேலி செய்கிறார்கள்..வேதனை தெரிவித்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான்

பாகிஸ்தான் பொருளாதார அழிவின் விளிம்பில் இருப்பதாக இந்திய ஊடங்கங்கள் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறார்கள் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் பாகிஸ்தான் கடும் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. வரலாறு காணாத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.272க்கு அங்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், எரிபொருள் உயர்வால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் பாகிஸ்தானில் எழுந்துள்ளது. இம்ரான் கான் வேதனை இந்த நிலையில் … Read more

விளாத்திகுளம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட சுறா இறக்கைகள், திருக்கை பூவை ரசாயனம் ஊற்றி அழித்த வனத்துறை

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்று பறிமுதல் செய்யப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான சுறா மீன் இறக்கைகள், திருக்கை மீன் பூ ஆகியவற்றை வனத்துறையினர் ரசாயனம் ஊற்றி அழித்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்துள்ள வேம்பாரில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக சுறா மீன் இறக்கை மற்றும் திருக்கை மீன் பூ கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் போலீசார் வேம்பார் … Read more

செங்கல்பட்டு அருகே டிப்பர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 30 பேர் படுகாயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே டிப்பர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற அரசு பேருந்து எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் உள்பட 30 பேர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊழல் அரசியல்வாதிகளை சுத்தம் செய்யும் வாஷிங் மிஷினாக மாறிவிட்டது பாஜக: ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா காட்டம்

புதுடெல்லி: ஊழல் அரசியல்வாதிகளை சுத்தம் செய்யும் வாஷிங் மிஷினாக பாஜக மாறிவிட்டது என்று ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா காட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். நேற்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளான கே.கவிதாவிடம், இதே வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், ராஜ்யசபா … Read more

பாலாவின் டைரக்சனில் மீண்டும் நடிக்க விரும்பும் விஷால்

இயக்குனர் பாலா தனது திரையுலக பயணத்தில் தற்போது மிக இக்கட்டான தருணத்தில் இருந்து வருகிறார். சூர்யாவை வைத்து அவர் ஆரம்பித்த வணங்கான் படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்று முடிந்த நிலையில் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொள்வதாக அறிவித்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த கதாபாத்திரத்தில் அருண்விஜய் நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது. சேது, நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் வெளியான பிறகு விக்ரம், சூர்யா ஆகியோருக்கு திரை உலகில் ஏற்பட்ட மறுமலர்ச்சியை … Read more

மேற்கு வங்காளத்தில் மீண்டும் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு – உரிய விசாரணைக்கு உத்தரவு

கொல்கத்தா, இந்தியாவில் அண்மையில் தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைறெ்று வருகிறது. இந்த நிலையில், மேற்குவங்காள மாநிலம் ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டு சென்றது. முர்ஷிதாபாத் மாவட்டம் பராக்கா பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் ரெயில் மீது திடீரென்று கற்களை சரமாரியாக வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ரெயில் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்துள்ளது. கல்வீச்சு தாக்குதலில் பயணிகள் … Read more

பார்டர்-கவாஸ்கர் கோப்பை: 3 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசி விராட் கோலி அசத்தல்…!

அகமதாபாத், ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியா தற்போது விளையாடி வருகிறது. இந்திய அணி தற்போதிய நிலவரப்படி 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில், இப்போட்டியில் … Read more