இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய மெராபி எரிமலை – பொதுமக்கள் வெளியேற்றம்

ஜகார்தா, இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர் அளவுக்கு சாம்பல் புகையை வெளியேற்றியதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இங்கு, யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் , 2,968 மீட்டர் (9,721 அடி )உயரமுள்ள மெராபி எரிமலை, நள்ளிரவு வெடித்துச் சிதறியது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி கிராமவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிலிருந்து வெளியேறும் கரும்புகை சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு பரவும் எனவும், தீக்குழம்பும் வெளியேறி, … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: நாடளுமன்றத்தில் விவாதிக்க கோரி தி.மு.க நோட்டீஸ்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: நாடளுமன்றத்தில் விவாதிக்க கோரி தி.மு.க நோட்டீஸ் Source link

`ராஜராஜ சோழன் படையிலிருந்த அலங்கு; கிரேடன்; சிப்பிப் பாறை' – தஞ்சை நாய்கள் கண்காட்சி ரவுண்ட் அப்

தஞ்சாவூரில் முதன் முதலாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் பங்கெடுப்பதற்காக பலரும் தாங்கள் வளர்க்கும் நாய்களை அழைத்து வந்தனர். தங்களின் நாய்களுக்கு அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தனர். தஞ்சாவூர் அருகே உள்ள மாதா கோட்டையில் மிருகவதை தடுப்புச் சங்கம் அமைந்துள்ளது. அதில் கால்நடை பாரமரிப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்த நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் நாயுடன் மாவட்ட ஆட்சியர் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் முதல் நாய்கள் கண்காட்சி என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. … Read more

தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை வழக்கில் தொடர்புடைய நபரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 ஆம் தேதி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் முன் விரோதம் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தநிலையில், 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 2 பேரை போலீசார் கைது செய்தநிலையில், முக்கிய குற்றவாளியான ஜெயபிரகாஷ் தட்டப்பாறை காட்டுப்பகுதியில் இருப்பதாக கிடைந்த … Read more

கண்டோன்மெண்ட் போர்டு தேர்தல் | 15 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம் அதிர்ச்சியளிக்கிறது: முத்தரசன்

சென்னை: “கண்டோன்மெண்ட் எல்லைக்குள், நீண்ட பல ஆண்டுகளாக, குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு, ராணுவ நிலத்தில் குடியிருப்பதை காரணம் காட்டி வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கண்டோன்மெண்ட் போர்டு தேர்தல் வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் சுமார் 15 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது … Read more

டபுள் எஞ்சின் அரசு; கொட்டும் வருவாய்… மாண்டியாவில் பிரதமர் மோடி பெருமிதம்!

கர்நாடக மாநிலம் மாண்டியாவிற்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடி, பொதுமக்களை சந்திக்கும் வகையில் ரோடு ஷோ (Road Show) நடத்தினார். அப்போது மலர்களை தூவி பிரதமரை பொதுமக்கள் வரவேற்றனர். இதையடுத்து 8,478 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 118 கிலோமீட்டர் தூரமுள்ள பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். புதிய திட்டங்கள் தொடக்கம் இது தேசிய நெடுஞ்சாலை 275ஐ (NH-275) சேர்ந்தது. இதையடுத்து மைசூரு – குஷாலநகர் இடையில் நான்கு வழி சாலைக்கான … Read more

Rajinikanth: ரஜினிக்கும், லதாவுக்கும் பிபியைை எகிற வைத்த நாராயணன்

Superstar Rajinikanth’s kutty story: ருசியான சாப்பாடு கிடைத்த சந்தோஷத்தில் அதை சாப்பிட்டு பிபி எகிறிய கதையை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். ​ரஜினி​Rajinikanth: மீண்டும் இஸ்லாத்திற்கு மாறும் ரஜினி: ஆனால் பெரிய சம்பவமாம்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் உடல்நலத்தில் அதிகம் கவனம் செலுத்தக் கூடியவர். சாப்பாட்டு விஷயத்திலும் கட்டுப்பாடாக இருப்பார். ஷூட்டிங்ஸ்பாட்டில் அவர் சாப்பிடுவதை பார்த்து, என்ன சார், காசு பணம் இருந்தும் இப்படி சாப்பிடுகிறீர்களே என பரிதாபப்பட்டவர்கள் உண்டு. அந்த அளவுக்கு ருசிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆரோக்கியத்திற்கு … Read more

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு இளம் பெண்ணின் மரணம்

கண்டியில் நேற்று(11.03.2023) சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அலவத்துகொட பகுதியை சேர்ந்த 26 வயதான தனுக வதுவந்தி என்பவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியிலுள்ள வயல்வெளியில் புதைந்திருந்த நிலையில் பொலிஸார் சடலத்தை மீட்டனர். குறித்த பெண் காணாமல் போனமை தொடர்பில் உயிரிழந்தவரின் தாய்க்கு கணவன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், தேடுதலின் போது சடலம் மீட்கப்பட்டது. பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் … Read more

எலிகளிடம் உருமாறிய மூன்று வகையான கொரோனா வைரஸ்..!

அமெரிக்காவிலுள்ள எலிகளிடம் உருமாறிய மூன்று வகையான கொரோனா வைரஸ்களும் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின், அறிவியல் இதழிலில் வெளியாகியுள்ள கட்டுரையில் எலிகளிடம் சார்ஸ் கோவிட்-2 (SARS-CoV-2) வகையைச் சேர்ந்த ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் ஆகிய வைரஸ்கள் இருப்பதாகவும், ஆய்வு செய்யப்பட்ட 79 எலிகளில் 13 எலிகளிடம் கொரோனா வைரஸ் தாக்கத்தை கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எலிகளிடமிருந்து மனிதருக்கு கொரோனா பரவியதா என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லையெனவும், எலிகளை எவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கியது என்பது குறித்து தொடர்ந்து … Read more

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய ஜார்க்கண்ட் இளைஞர் கைது..!

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி வீடியோ பரப்பியது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு பீகாரை சேர்ந்த ருபேஷ் குமார் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ரயில்வேயில் போர்ட்டராக பணியாற்றிவரும் ஜார்க்கண்ட்டை சேர்ந்த பிரசாந்த் … Read more