சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் கோலாகல துவக்கம்: பூத்தட்டுகளுடன் பக்தர்கள் குவிந்தனர்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா இன்று கோலாகலமாக துவங்கியது. சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு பூச்சொரிதல் விழா இன்று (12ம் தேதி) காலை துவங்கியது. இதையொட்டி அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.  பின்னர் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் தட்டுகளில் பூக்களை ஏந்தி யானையுடன் தேரோடும் வீதியில் … Read more

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 150 ரன்களை கடந்தார் விராட் கோலி!

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 150 ரன்களை கடந்துள்ளார். இந்திய அணி தற்போது 5 விக்கெட்  இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவை விட 38 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு; கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்?: கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவும், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக – காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ‘லோக் போல்’ என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், வரும் சட்டசபை ேதர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. அந்த கருத்துக் கணிப்பின்படி, … Read more

ஏர் இந்தியா விமானத்தில் தந்திரமாக கழிப்பறையில் புகைப்பிடித்த அமெரிக்கர் மீது வழக்கு | US citizen booked for smoking in bathroom, misbehaving with passengers on Air India London-Mumbai flight

மும்பை: லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் தந்திரமாக கழிப்பறையில் புகைப்பிடித்த அமெரிக்க பயணி மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லண்டனில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அப்போது அமெரிக்க குடிமகனான ரமாகாந்த் (37) என்பவர் விமானத்தில் பயணம் செய்துள்ளார். இவர் குடிப்போதையில் இருந்ததால், விமானத்தில் பயணம் செய்த சக பயணியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து இந்த பயணியை விமான ஊழியர் எச்சரித்துள்ளார். இதையடுத்து ரமாகாந்த் விமானத்தின் அவசர … Read more

நிவின்பாலிக்கு பதிலடி கொடுத்த துறமுகம் பட தயாரிப்பாளர்

மலையாளத்தில் இந்த வாரம் நிவின்பாலி நடித்த துறைமுகம் என்கிற படம் வெளியாகி உள்ளது. துல்கர் சல்மான் நடித்த கம்மட்டி பாடம் உள்ளிட்ட விருது படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார் ஓரளவு பாசிட்டிவான விமர்சனங்களுடன் வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் 2018ல் துவங்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆன நிலையில் ரொம்பவே தாமதமாக ரிலீஸ் ஆகி உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நிவின்பாலி இந்த படம் … Read more

லாலு பிரசாத் யாதவ்: "ரூ.600 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்கிறது!" – ரெய்டு குறித்து அமலாக்கத்துறை

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், 2004-2009 வரை ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக வாங்கியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில், குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என 2021-ல் சி.பி.ஐ விசாரணையை முடித்துக்கொண்டது. இந்த நிலையில், தற்போது இந்த வழக்கை மீண்டும் தோண்டியெடுத்து, லாலு பிரசாத் யாதவ், அவரின் மனைவி, மகன் தேஜஸ்வி யாதவ் உட்பட மொத்த குடும்பத்தையும் விசாரித்துவருகிறது. தேஜஸ்வி யாதவ், ராப்ரி … Read more

கொல்லப்பட்ட ரவுடியின் இறுதி ஊர்வலத்தில் கலவரம்- 10 பேர் மீது வழக்குப் பதிவு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட ரவுடியின் இறுதி ஊர்வலத்தின்போது கலவரத்தில் ஈடுபட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளராக இருந்த பூவனூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வெள்ளிக்கிழமை அன்று கமலாபுரம் அருகில் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜ்குமாரின் இறுதி ஊர்வலத்தின்போது, கடைகளை உடைத்தும், காவல்துறை வாகனங்களை தாக்கியும் கலவரத்தில் … Read more

பல இடங்களில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி முடிவு பெறவில்லை: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

சென்னை: “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிந்து, அந்தந்த பகுதிகளில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இருந்த போதும் மக்களின் அத்தியாவசிய தேவையான சாலை, குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகள், இன்னும் சரிவர முழுமைப் பெறாமல் காணப்படுகிறது” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர மாநகராட்சியில் பல இடங்களில் சாலைகள் மிகவும் பழுதடைந்து வாகனங்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி முடிவு … Read more

சிலிகான் வேலி வங்கியை வாங்கும் திட்டத்தில் எலான் மஸ்க்?

கலிபோர்னியா: அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான, சிலிகான் வேலி வங்கி (எஸ்விபி) திவாலானது. அந்த வங்கியின் பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்தது இதற்கு காரணம். அதனால் அந்த வங்கியில் வைப்புத்தொகை வைத்திருந்த நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை திரும்பப் பெற்றனர். இந்நிலையில், அந்த வங்கியை வாங்கும் திட்டத்தில் தான் இருப்பதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க கேமிங் நிறுவனமான ரேசரின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மின்-லியாங் டான், திவாலான சிலிகான் வேலி … Read more