அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்த நிலையில், தனது மகன் உடல்நலம் பெற பிரார்த்தனை வேண்டும் என அதன் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தவறி விழுந்த குழந்தை
நியூ ஜெர்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், கடந்த மார்ச் 4ஆம் திகதி குழந்தை ஒன்று ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்தது.
எனினும் அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை படுகாயங்களுடன் உயிர் பிழைத்தது. தற்போது ஆறு வயதாகும் ஜோஹர் டில்லர்ட் என்ற அந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
உடலில் பல எலும்பு முறிவுகள், கல்லீரல் சிதைவு, உட்புற இரத்தப்போக்கு மற்றும் நுரையீரல் சரிவு ஆகியவற்றால் ஜோஹர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது.
பிரார்த்தனை கேட்கும் தாய்
இந்த நிலையில் ஜோஹரின் தாய் Alexis Adams, அதிசயமாக உயிர் பிழைத்த தனது மகன் பூரண குணம் பெற வேண்டி, அனைவரிடமும் பிரார்த்தனை கேட்கிறார்.
அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒரு சோகமான வீழ்ச்சியில் இருந்து அதிசயமாக உயிர் பிழைத்த அவர், சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெறுகிறார். அவர் புனர்வாழ்வுக்கு உட்பட்டு வருவதால் உங்களது தொடர்ச்சியான பிரார்த்தனைகளை நான் கேட்டுக் கொள்கிறேன், ஆனால் இது தனிப்பட்ட விடயமாக இருப்பதை நான் பாராட்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கட்டிட உரிமையாளர்கள், மேலாளர்கள், பராமரிப்பு நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சன்னல்களில் சரியான பாதுகாப்பு அமைப்பை செய்ய தவறியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறி, ஜோஹரின் மருத்துவ கட்டணம் மற்றும் இழப்பீடுகளுக்காக Alexis Adams வழக்கு தொடர்ந்துள்ளார்.