கனடா எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் உட்பட ஆறு பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்தியா மற்றும் ரோ மேனியா நாடுகளை சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சித்துள்ளனர்.
கனடாவில் இருந்து செயிண்ட் லாரன்ஸ் ஆறு வழியாக படகில் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்தபோது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து அதில் இருந்தவர்கள் ஆற்றில் அடித்துசெல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், ஆற்றில் மாயமான குழந்தையை தேடும் பணி நடைபெற்றுவருகிறது.