கனடா – அமெரிக்க எல்லையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 என அதிகரித்துள்ளதாகவும், ஒரு பச்சிளம் குழந்தை உட்பட இருவரின் சடலம் புதிதாக மீட்கப்பட்டுள்ளதாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ருமேனிய மற்றும் இந்திய வம்சாவளி
வியாழன் அன்று ஐந்து பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தையின் உடல்களை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ருமேனிய மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களின் உறுப்பினர்கள் இவர்கள் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்திருந்தது.
@AP
மேலும், வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை கனேடிய குடிமகன் எனவும் ருமேனிய குடும்ப உறுப்பினர் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், அவர் இந்தியர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இறந்த எட்டு பேரும் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில், Akwesasne பகுதியை சேர்ந்த 30 வயது கேசி ஓக்ஸ் என்பவரைத் தேடுவதாகவும்,
குறித்த நபர் புலம்பெயர் மக்களின் உடல்களுக்கு அடுத்ததாக காணப்பட்ட ஒரு படகை கடந்த புதன்கிழமை இயக்கிக் கொண்டிருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தற்போது மீட்கப்பட்ட புலம்பெயர் மக்களின் சடலங்களுக்கும், அந்த நபருக்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து உறுதி செய்வது முறையல்ல எனவும் பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனவரி முதல் 48 சம்பவங்கள்
ஜனவரி முதல் மொஹாக் பிரதேசத்தின் ஊடாக கனடாவிற்குள் அல்லது அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக செல்ல முயன்ற 48 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக Akwesasne பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Credit: Global News
அவர்களில் பெரும்பாலோர் இந்திய அல்லது ருமேனிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றே கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 2022ல், மொஹாக் பிரதேசத்தின் வழியாக ஓடும் செயின்ட் ரெஜிஸ் ஆற்றில் மூழ்கிய படகில் இருந்து ஆறு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
இதில் ஏழாவது நபர், படகை விட்டு வெளியேறி கரைக்கு தப்பியவர், பின்னர் அமெரிக்க குடிமகனாக அடையாளம் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.