எடப்பாடி பழனிசாமிக்காக நேர்த்திக்கடன்! முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அதிமுக பெண் எம்.எல்.ஏ.!

சென்னை: எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கோவில் கோவிலாக கடந்த 2 நாட்களாக செல்லத் தொடங்கியுள்ள அவர்கள் தங்கத்தேர் இழுப்பது, அன்னதானம் வழங்குவது, என நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

அந்த வகையில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் திருப்போரூர் முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

அதிமுக பொதுச்செயலாளர்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தீர்ப்பின் அடிப்படையில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக கடந்த 28ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆடம்பர விழா இல்லாமல் தீர்ப்பு வந்த சில நொடிகளில் மிகவும் எளிமையாக அதிமுக தலைமைக் கழகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

தமிழ் மகன் உசேன்

தமிழ் மகன் உசேன்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் தமிழகம் முழுவதும் உள்ள தர்ஹாக்களில் சிறப்பு வழிபாடு நடத்தியவர் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன். இந்நிலையில் தற்போது தனது வேண்டுதல் நிறைவேறிவிட்டதால் மீண்டும் நாகூர், ஏர்வாடி என தமிழகத்தின் முக்கிய தர்ஹாக்களுக்கு விசிட் அடிக்கவுள்ளார் தமிழ் மகன் உசேன். தற்போது ரமலான் மாதம் நடைபெற்று வருவதால் ரமலான் முடிந்தவுடன் அவர் செல்லவிருக்கிறார்.

கோவில்களில் நேர்த்திக்கடன்

கோவில்களில் நேர்த்திக்கடன்

அதேபோல் கோவில்கள், தேவாலயங்களிலும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றால் தங்கத் தேர் இழுப்பதாக வேண்டுதல் வைத்திருந்தார் மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல். அதனை நிறைவேற்றும் விதமாக திருப்போரூர் முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

அப்டேட் செய்வதில் கவனம்

அப்டேட் செய்வதில் கவனம்

எடப்பாடி பழனிசாமிக்காக தாங்கள் என்னென்னவெல்லாம் செய்கிறோம், எப்படியெல்லாம் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகிறோம் என்பதை அவருக்கு அப்டேட் செய்வதிலும் இவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.