
எனக்கு மரணமும் நிகழலாம் – பாலா உருக்கம்
இயக்குனர் சிவாவின் தம்பி, நடிகர் பாலா. ‛அன்பு, காதல் கிசு கிசு' என ஆரம்பகாலங்களில் ஓரிரு படங்களில் ஹீரோவாக நடித்தார். பின்னர் அஜித்தின் வீரம் படத்தில் நடித்து பிரபலமானார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் கல்லீரல் பிரச்னை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
இந்நிலையில் தனது மனைவியுடன் திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார் பாலா. அந்த வீடியோவை பகிர்ந்து, ‛‛அனைவரின் பிரார்த்தனையாலும் குணமாகி வருகிறேன். அடுத்த சில தினங்களில் எனக்கு முக்கியமான ஆபரேஷன் நடக்க உள்ளது. இதில் மரணம் கூட ஏற்படலாம், பிழைக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. இப்போதைக்கு மருத்துவர்கள் அறிவுரைப்படி மருத்துவமனையில் உள்ளேன்'' என்றார்.