என்னது இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கடத்தப்பட்டாரா..? அடப்பாவமே இது எப்போ நடந்துச்சு!

சென்னை: அஜித்குமார் நடித்த தீனா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏஆர் முருகதாஸ்.

கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஏஆர் முருதகாஸ், தற்போது ஆகஸ்ட் 16 1947 என்ற படத்தை தயாரித்துள்ளார்.

கெளதம் கார்த்திக் நடித்துள்ள இந்தப் படம் வரும் 7ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், கஜினி திரைப்படம் இயக்கிய போது ஏஆர் முருகதாஸ் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து தற்போது பார்க்கலாம்.

இயக்குநர் ஏஆர் முருகதாஸ்

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஏஆர் முருகதாஸ், தற்போது ஆகஸ்ட் 16 1947 என்ற படத்தை தயாரித்துள்ளார். கெளதம் கார்த்திக் நடித்துள்ள இந்தப் படம் வரும் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், விரைவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 1947 இசை வெளியீட்டு விழாவில் இதுகுறித்து சிவகார்த்திகேயன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 கஜினி ப்ளாஷ்பேக் ஸ்டோரி

கஜினி ப்ளாஷ்பேக் ஸ்டோரி

சிவகார்த்திகேயன் – ஏஆர் முருகதாஸ் இணையும் படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். இந்நிலையில், சூர்யாவின் கஜினி படம் இயக்கிய போது ஏஆர் முருகதாஸுக்கு நடந்த சம்பவம் பற்றிய ஒரு தகவல் வைரலாகி வருகிறது. சூர்யா – ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவான கஜினி தாறுமாறான ஹிட் படமாக அமைந்தது. இந்தப் படத்தை முதலில் குறைவான பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளார் ஏஆர் முருகதாஸ்.

 டென்ஷனான தயாரிப்பாளர்

டென்ஷனான தயாரிப்பாளர்

ஆனால், கஜினி படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடியும் போது 13 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சென்றுள்ளது. சூர்யாவுக்கு பெரிய ஓப்பனிங் இல்லாத நேரத்தில் இந்த பட்ஜெட்டை பார்த்து தயாரிப்பாளர் டென்ஷனாகிவிட்டாராம். இதனால் சூர்யாவிற்கு 20 லட்சம் வரை சம்பள பாக்கியும் இருந்துள்ளது. ஆனால், சூர்யாவின் மேனேஜர் மீதி சம்பளத்தை கேட்டு அவசரப்படுத்தியதால், கஜினி படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸை தயாரிப்பாளர் அவசரப்பட்டு கொடுத்துவிட்டாராம்.

 ஏஆர் முருகதாஸ் மீது புகார்

ஏஆர் முருகதாஸ் மீது புகார்

ஆனால், கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கான் ஹீரோவாக கமிட்டானதோடு, ஏஆர் முருகதாஸ் தான் இயக்குநர் எனவும் அறிவித்துவிட்டார். இதனால் தயாரிப்பாளர் சந்திரசேகர், ஏ.ஆர். முருகதாஸ் தன்னை ஏமாற்றிவிட்டதாக சேலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கஜினி படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ்ஸை தனக்கு தெரியாமல் தயாரிப்பாளர் விற்றுவிட்டதாக ஏஆர் முருகாதாஸும் கூறியுள்ளார்.

 கடத்தப்பட்ட ஏஆர் முருகதாஸ்

கடத்தப்பட்ட ஏஆர் முருகதாஸ்

இந்நிலையில், எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்ற ஏ.ஆர் முருகதாஸை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளனர். இதனையறிந்த அவரது நண்பர்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்குச் சென்று நடிகை ராதிகாவிடம் விசயத்தை கூறியுள்ளனர். உடனடியாக அவர் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு விவரத்தை கூறி ஏ.ஆர். முருகதாஸை மீட்டுள்ளார். ஆனால், அப்போது தான் ஏஆர் முருகதாஸ் கடத்தப்படவில்லை, அவரை சேலம் போலீஸார் தான் அழைத்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அதன்பின்னர் கஜினி ரீமேக் ரைட்ஸ் விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி முடித்துவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.