பஞ்சாப் அணியில் விளையாடி வரும் இலங்கை வீரர் பனுகா ராஜபக்ச அதிரடியாக அரைசதம் விளாசினார்.
பனுகா ராஜபக்ச விஸ்வரூப ஆட்டம்
ஐபிஎல் 2023யின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக 12 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
அதன் பின்னர் களமிறங்கிய இலங்கையின் பனுகா ராஜபக்ச, எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டிய அவர், அவ்வப்போது துரிதமாக ஓட்டங்களையும் சேர்த்தார். அவரது ஆட்டத்தினால் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் மிரண்டு போயினர்.
The Bhanuka Express👊pic.twitter.com/jhkeBBO8Ru
— Punjab Kings (@PunjabKingsIPL) April 1, 2023
அரைசதம் விளாசல்
அவருக்கு பக்கபலமாக ஷிகர் தவான் பொறுப்பான ஆட்டத்தினால் பஞ்சாப் அணியின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
அதிரடியில் பட்டையை கிளப்பிய பனுகா ராஜபக்ச, 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால் அடுத்த 2 பந்துகளில் அவர் 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பனுகா ராஜபக்ச 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளை விரட்டினார். பனுகா – தவான் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 86 ஓட்டங்கள் குவித்தது.
@BCCI