பெங்களூரு : ஓட்டுப்பதிவு நடக்கும் மே 10ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும்படி இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபைக்கு மே 10ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. மே 13ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
ஏப்ரல் 13ம் தேதி முதல் மனு தாக்கல் ஆரம்பமாகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கிறது.
எனவே அனைவரும் தங்களின் ஜனநாயக கடமை ஆற்றும் வகையில், ஓட்டுப்பதிவு நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும்படி அனைத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு ஊழியர்களுக்கு தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டுள்ளது.
‘ஷிப்ட்’ முறையில் பணியாற்றுபவர்களுக்கும் அன்றைய தினம் கட்டாயமாக விடுமுறை அளிக்கும்படி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தினக்கூலி ஊழியர்களுக்கும் விடுமுறை பொருந்தும்.
உத்தரவை மீறினால், அத்தகைய நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement