கன்னியாகுமரி மாவட்டம், கல்படி பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி மஞ்சு தெருவில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றபோது அங்கிருந்த மகேஸ்வரி என்ற பெண்ணுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று மஞ்சுவும், ரமேஷும் வீட்டில் இருப்பதை அறிந்த மகேஸ்வரி, தனது தாயார் தமிழ்ச்செல்வி தம்பி மது, கோபாலகிருஷ்ணன் ஆகியவுடன் சேர்ந்து ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே மகேஸ்வரி தரப்பு ரமேஷை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ரமேஷ் வலி தாங்க முடியாமல் சுருண்டு கீழே விழுந்துள்ளார்.
பலத்த காயமடைந்த ரமேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்துவந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ரமேஷின் 10 வயது மகன் ஃபோனில் வீடியோவாக எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், மகேஸ்வரி மற்றும் அவரின் தாயார் தமிழ்ச்செல்வி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக இருக்கும் மது, கோபாலகிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.