காந்திநகர் : காந்திநகர் தொகுதி ம.ஜ.த., முன்னாள் தலைவர் சிவப்பா உட்பட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு விலகி, காங்கிரசில் இணைந்தார்.
பெங்களூரு காந்திநகர் சட்டசபை தொகுதி முன்னாள் ம.ஜ.த., தலைவர் சிவப்பா. இவர், மாநகராட்சி கவுன்சிலராகவும், நிலைக்குழு தலைவராகவும் பதவி வகித்தவர்.
இவரும், ம.ஜ.த.,வின் மாநில சிறுபான்மையினர் அணி துணை தலைவர் ஜேம்ஸ், தத்தாத்ரேயா வார்டு செயலர் சீனிவாசகவுடா உட்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினர்.
பின், காந்திநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., தினேஷ்குண்டுராவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். கட்சி கொடி வழங்கி அவர்களை காங்கிரசில் இணைத்து கொள்ளப்பட்டனர்.
தினேஷ் குண்டுராவ் பேசுகையில், ”கர்நாடகாவில் காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. இதற்கு முன் காங்கிரசில் இருந்து விலகியவர்கள், தற்போது மீண்டும் கட்சியில் இணைகின்றனர்.
”ஜாதி, மத பேதமின்றி அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ்வதற்கு காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்,” என்றார்.