வெற்றிமாறனின் ‘விடுதலை’ படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுக்களை அள்ளி வருகிறது. தனது முந்தைய படங்களை போல இந்தப்படத்தினையும் சமூக அக்கறையுடன், காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தை கேள்வி கேட்கும் விதமாக உருவாக்கியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வரும் ‘விடுதலை’ படம் விமர்சகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
ஏற்கனவே இயக்கியது போல் இந்தப்படத்தையும் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன். ஜெயமோகனின் ‘துணைவன்’ நாவலை தழுவி இந்தப்படம் இயக்கப்பட்டுள்ளது. ‘அசுரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூரியை ஹீரோவாக்கி ‘விடுதலை’ படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘விசாரணை’ படத்தில் போலி என்கவுண்டர் குறித்தும் காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம் குறித்தும் தோலுரித்து காட்டியிருப்பார் வெற்றிமாறன்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதே பாணியில் ‘விடுதலை’ படத்தில் காவல்துறையின் அராஜக போக்கையும், சாமானிய மக்களுக்கு எதிராக போலீசார் தங்களின் அதிகாரங்களை எப்படி குறுக்கு வழியில் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் குறித்து பேசியுள்ளார். அழுத்தமான வசனங்களாலும், காட்சிகளாலும் ‘விடுதலை’ படம் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.
குறிப்பாக இத்தனை நாட்களாக நகைச்சுவை நடிகராக பார்க்கப்பட்ட சூரி ‘விடுதலை’ படத்தில் ஹீரோவாக குணசேகரன் கதாபாத்தித்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டி தள்ளி வருகின்றனர். அந்தளவிற்கு சூரி கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன். சில காட்சிகளே வந்தாலும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார் விஜய் சேதுபதி. அதே போல் கெளதம் மேனன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டோரையும் வெற்றிமாறன் சரியாக பயன்படுத்தியுள்ளதாக பலரும் பாராட்டி தள்ளி வருகின்றனர்.
Viduthalai Part 1: முதல் படத்திலே கிடைத்த லைப் டைம் ரோல்.. விடுதலையில் பாராட்டுக்களை அள்ளும் சூரி.!
இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ‘விடுதலை’ படத்திற்கு அளித்துள்ள விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோவில், தனுஷை வைத்து தொடர் ஹிட் கொடுத்த வெற்றிமாறன் நினைச்சு இருந்தா பெரிய ஹீரோவை வைச்சு ஒரு படத்தை எடுத்துருக்கலாம். ஆனா கதையை மட்டும் நம்பி, சூரியை கதையின் நாயகனாக ஆக்கி சர்வதேச தரத்துல ஒரு படத்தை கொடுத்து இருக்காரு. இதை வைச்சு பார்க்கும் போது வெற்றிமாறன தான் பெரிய இயக்குனருன்னு ஒத்துக்கிற முடியும்.
‘விடுதலை’ படம் அவரை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போயிருக்கு. பர்ஸ்ட் பிரேம்லயே கதையை ஆரம்பிச்சு. ஒரே நேர்கோட்ல படம் பயணிச்சு இருக்கு. படத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரமும் கச்சிதமா பொருந்தி இருந்தாங்க. கரணம் தப்புனா மரணம்ன்ற மாதிரி, கொஞ்சம் தப்புனாலும் டாக்குமென்ட்ரி பீல் கொடுத்துருக்க வேண்டிய படம். ஆனாலும் திரைல இருந்து கண்ணையே விலக்க முடியாத அளவுக்கு படம் அவ்வளவு கிரிப்பிங்கா இருந்தது என ‘விடுதலை’ படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார் மாறன்.
Rajinikanth: தலைவரின் அடுத்த பட லுக்.. வெறித்தனமா இருக்கே: தீயாய் பரவும் போட்டோஸ்.!