புதுடெல்லி : டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து மார்ச் 9ம் தேதி அமலாக்கத்துறை சிசோடியாவை கைது செய்தது. இந்நிலையில் ஜாமீன் கேட்டு சிசோடியா தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 24ம் தேதி சிசோடியா ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று நீதிபதி எம்கே நாக்பால் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.