பெஷாவர்:பாகிஸ்தானில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில், சீக்கிய தொழிலதிபர் பலியான சம்பவம் அங்குள்ள சிறுபான்மையின மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவரில் வசித்த தயாள் சிங் என்ற தொழிலதிபர், நேற்று முன் தினம் மாலை தன் கடையில் இருந்து வெளியே வந்தபோது, மோட்டார் பைக்கில் வந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார்.
தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக, பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையின மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், அவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Advertisement