கேரளாவின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்றனர்.
வைக்கம் போராட்ட வீரர்கள் சிலைக்கு, இரு மாநில முதலமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், மலையாளத்தில் பேசி தனது உரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.
சுயமரியாதை, சமூக நீதிக்கான போராட்டத்தின் தொடக்கமாக வைக்கம் போராட்டம் இருந்ததாகவும், தமிழ்நாடு – கேரள தலைவர்கள் இணைந்து போராடியதற்கு கிடைத்த வெற்றியை இன்று கொண்டாடப்படுவதாகவும் முதலமைச்சர் கூறினார்.