சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்களன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரும் நாளை மறுநாள் நண்பகல் 12 மணிக்கு சென்னையில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் மீது புகார் எழுந்தது. பாலியல் புகார் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி நேற்று விசாரணை நடத்தினார். விசாரணையின்போது கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் விடுப்பில் இருந்தனர்.