தற்கொலை செய்ய நினைத்தேன் : ‛குத்து' ரம்யா திடுக்கிடும் தகவல்

தமிழில் சிம்பு நடித்த 'குத்து' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா. பின்னர் குத்து ரம்யா என்று அழைக்கப்பட்டார். ஆனால் அவரது இயற்பெயரான திவ்யாஸ் ஸ்பந்தனா என்ற பெயரில் கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாண்டியா தொகுதி எம்.பி.ஆனார். அதன்பிறகு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்த அவர் அரசியலை விட்டு விலகி தற்பொது படத் தயாரிப்பிலும், நடிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருந்தாக கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் பார்லிமென்ட் உறுப்பினராக இருந்தபோதுதான் எனது தந்தை மரணம் அடைந்தார். இதனால் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர் அருகில் இருந்து பார்க்காத வாழ்க்கையை ஏன் வாழ வேண்டும் என்று தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தேன்.

அப்போது ராகுல் காந்தி எனக்கு தைரியம் அளித்தார். மக்களுக்கான சேவையில் உன் தந்தையை காணலாம் என்றார். அதன்பிறகுதான் பார்லிமென்ட் பணிகளில் அக்கரை காட்டினேன். ராகுல் மட்டும் இல்லையென்றால் நான் தவறான முடிவெடுத்திருப்பேன். என் வாழ்க்கையில் மிகப்பெரிய மதிப்பு மிக்கவர் ராகுல். எனது தாய் தந்தைக்கு அடுத்து எனது வாழ்க்கையில் 3வது இடத்தில் அவரை வைத்திருக்கிறேன். என்றார்.

அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த ரம்யா தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அதில் போட்டியிட விரும்புகிறார். அதற்காகத்தான் இந்த ராகுல் புராணம் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.